செய்திகள் :

கும்பகோணம்: `மாசிமக விழா தீர்த்தவாரி'- மகாமகக் குளத்தில் புனித நீராடிய ஆயிரகணக்கான பக்தர்கள்

post image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா, 'தென்னகத்துக்குக் கும்பமேளா' என்று அழைப்படும். ஒவ்வோர் ஆண்டும் மாசிமாதத்தில் வரும் மக நட்சத்திர நாள், 'மாசிமகம்' வெகுவிமர்சையாக நடைபெறும். இதையொட்டி மகாமகக் குளத்தில் நடைபெறும் தீர்த்தவாரி மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

மாசிமக விழா தேரோட்டம்

அந்த வகையில், இந்தாண்டு, சைவத் தலங்களான காளஹஸ்தீஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர் கோயில்களில் கடந்த மார்ச் 3-ம் தேதியும், வைணவ தலங்களான சக்கரபாணி சுவாமி, ராஜகோபால சுவாமி, ஆதிவராக சுவாமி ஆகிய மூன்று கோயில்களில், கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் மாசிமக விழா தொடங்கியது. இதையடுத்து சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா கண்டருளினர்.

நேற்று காலை ஞானாம்பிகையம்மன் உடனாய காளஹஸ்தீவரர் தேரோட்டமும், மாலை சோமசுந்தரி அம்பிகை உடனாய சோமேஸ்வரர் கோயில் தேரோட்டம் கோயிலைச் சுற்றியும், காசி விசாலாட்சி அம்மன் உடனாய காசிவிஸ்வநாதர், அமிர்தவள்ளி அம்பாள் உடனாய அபிமுகேஸ்வரர் சுவாமி சவுந்திரநாயகி உடனாய கவுதமேஸ்வரர் ஆகிய மூன்று கோயில்களின் உற்சவமூர்த்திகளுக்கு மகாமகக்குளத்தைச் சுற்றித் தேரோட்டம் நடந்தது.

மாசிமக விழா

இதைத்தொடர்ந்து, இன்று காசிவிஸ்வநாதர், சோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கோடிஸ்வரர், அமிர்தகலசநாதர், பாணபுரீஸ்வரர் ஆகிய 10 சிவன் கோயில்களில் இருந்து சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன், சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவாகப் புறப்பட்டு, மகாமகக் குளக்கரைக்கு வந்தடைந்தனர். பிறகு, குளத்தில் அஸ்ரதேவருக்குப் பல்வேறு வகையான மங்களப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதணை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதுடன் மகாமகக் குளத்தில், புனித நீராடினர்.

மகாமகத்தின் முதன்மை கோயிலான ஆதிகும்பேஸ்வரர் கோயில், ஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோயில்களில் கும்பாபிஷேகப் பணிகள் நடந்து வருவதால், அந்தக் கோயில்களில் இந்தாண்டு மாசிமகப் பெருவிழா உற்சவம் கிடையாது என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல், சக்கரபாணி சுவாமி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராகப்பெருமாள் ஆகிய மூன்று கோயில்களில் காலை 6.30 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் தேரோட்டம் நடைபெற்றது. சாரங்கபாணி சுவாமி கோயில் பின்புறத்தில் உள்ள பொற்றாமரைக் குளத்தில், ஸ்ரீதேவி-பூதேவி உடனாய சாரங்கபாணி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருள தெப்ப உற்சவம் நடைபெற்றது.

மாசி மகம்: புதுச்சேரி திருக்காஞ்சியில் குவிந்த பக்தர்கள் |Photo Album

மாசிமகத்தை முன்னிட்டு புதுச்சேரி திருக்காஞ்சியில் குவிந்த பக்தர்கள்மாசிமகத்தை முன்னிட்டு புதுச்சேரி திருக்காஞ்சியில் குவிந்த பக்தர்கள்மாசிமகத்தை முன்னிட்டு புதுச்சேரி திருக்காஞ்சியில் குவிந்த பக்தர்கள... மேலும் பார்க்க

`தடைகளை உடைத்து மங்கலம் அருளும்' திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் விளக்குப் பூஜை

2025 மார்ச் 21-ம் தேதி திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்துகொண்டு அருள்பெறலாம். அதுகு... மேலும் பார்க்க

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்மர் கோயில்; 77 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்!

கும்பாபிஷேகம்கும்பாபிஷேகம்கும்பாபிஷேகம்கும்பாபிஷேகம்கும்பாபிஷேகம்கும்பாபிஷேகம்கும்பாபிஷேகம்கும்பாபிஷேகம்கும்பாபிஷேகம்கும்பாபிஷேகம்லட்சுமி நரசிம்மர் கோயில்லட்சுமி நரசிம்மர் கோயில்லட்சுமி நரசிம்மர் கோயி... மேலும் பார்க்க

சுந்தர்.சி - குஷ்பூ செலுத்திய நேர்த்திக்கடன்; குடும்பத்துடன் தரிசனம்; அன்னதானம் வழங்கி வழிபாடு

தமிழகத்தில் உள்ள ஆறுபடை வீடுகளில் முக்கியமானது மூன்றாம் படை வீடான பழநி. தமிழகம் மட்டுமில்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் முருக பத்கர்கள் வந்து செல்கின்றனர். அதேபோல அரசியல் பி... மேலும் பார்க்க

`கந்தன் வள்ளியை மணந்த கானகம்’ - வள்ளிமலைக்கு புதிய அறங்காவலர் குழுத் தலைவர் நியமனம்

கந்தன் வள்ளியை மணந்த வள்ளிமலைக்குச் சென்று முருகவேளையும் வள்ளிக்குறமகளையும் தரிசிப்பது விசேஷத்திலும் விசேஷம் என்கிறார்கள் பெரியோர்கள். ராணிப்பேட்டையிலிருந்து பொன்னை செல்லும் வழியில் 22 கி.மீ தொலைவில் ... மேலும் பார்க்க

Sri Raghavendra Swamy | குழந்தைகளின் எதிர்காலம் செழிக்க அருளும் புவனகிரி ராகவேந்திர சுவாமி கோயில்

மந்திராலயத்தில் பிருந்தாவனம் கொண்டு கலியுகத்தில் பக்தர்களுக்குக் கண் கண்ட தெய்வமாகத் திகழும் ஶ்ரீராகவேந்திர சுவாமிகள் அவதாரம் செய்தது புவனகிரி என்னும் தமிழக்த்தின் திருத்தலத்தில்தான். மந்திராலயத்துக்க... மேலும் பார்க்க