செய்திகள் :

சென்னை: உணவகத்தின் லிஃப்ட் அறுந்து ஊழியர் பலி

post image

சென்னை: அண்ணா சாலை பகுதியில் நட்சத்திர உணவகத்தின் லிஃப்ட் அறுந்து விழுந்து ஊழியர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலை பகுதியில் நட்சத்திர உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தின், புதிய லிஃப்ட் மாற்றுவதற்கான பணிகள் இன்று(மார்ச் 12) பிற்பகலில் தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், திடீரென்று பழைய லிஃப்ட்டின் இரும்புக் கம்பி திடீரென்று அறுந்து, லிஃப்ட்டை சரி செய்ய வந்த ஊழியர் மேல் விழுந்து, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

இதையும் படிக்க: ஜக்கி வாசுதேவ் மீதான அவதூறு விடியோவை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

காவல் துறையினரின் விசாரணையில் பலியானவர் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ஷாம் சுந்தர் என்பது தெரியவந்துள்ளது. லிஃப்டை சரி செய்ய வந்த ஊழியர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் ரியல் எஸ்டேட், பைனான்ஸ் நிறுவனங்களை நடத்தி வருபவர்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலைமுதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.வெப்பேரி பகுதியில் பைனான்ஸ் செய்து வருபவ... மேலும் பார்க்க

ஓய்வு பெற்றவா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம்: எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

அரசு காலிப் பணியிடங்களை நிரப்பாமல், ஓய்வு பெற்றவா்களை ஒப்பந்த அடிப்படையில் திமுக அரசு பணியில் நியமிப்பதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் ... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தான் நிலவரம்: இந்தியா தொடா் கண்காணிப்பு: ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் தகவல்

நியூயாா்க்: ஆப்கானிஸ்தான் நிலவரத்தை இந்தியா தொடா்ந்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இருதரப்பு உறவுகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அங்கு ஆட்சியிலுள்ள தலிபான் அரசுடன் கலந்துரையாடி வருவதாகவும் ஐ.ந... மேலும் பார்க்க

விதிமீறல்: 17 மக்கள் மருந்தகங்கள் மீது நடவடிக்கை மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் தீவிரம்

தமிழகத்தில் விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டதாக 17 மக்கள் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் முனைப்பு காட்டி வருகிறது. அதில் 8 மருந்தகங்களுக்கு விளக்கம் கேட்ட... மேலும் பார்க்க

கூட்டு நடவடிக்கைக் குழு: இன்று கா்நாடகம், தெலங்கானாவுக்கு செல்லும் திமுக குழு

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கும் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க திமுக குழு புதன்கிழமை (மாா்ச் 12) கா்நாடகம், தெலங்கானாவுக்குச் செல்கிறது.முன்னதாக, ஒடிஸா மாநிலத்துக்கு தமிழ... மேலும் பார்க்க

மருத்துவம் தொழில் சாா்ந்த ஆங்கில தோ்வுக்கான பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

சென்னை: மருத்துவம் தொழில் சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கான பயிற்சியில் சோ்ந்து பயிற்சி பெறத் தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்... மேலும் பார்க்க