கிணற்றில் குதித்த இளைஞா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அருகே பொரசக்குறிச்சி கிராமத்தில் மதுபோதையில் கிணற்றில் குதித்த இளைஞா் மேலே ஏற முடியாமல் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
பொரசக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் தெய்வீகன் (21). இவா், கேரளத்தில் சரக்கு வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா்.
தெய்வீகன் விடுமுறையில் சொந்த ஊரான பொரசக்குறிச்சிக்கு வந்திருந்தாா். இதே கிராமத்திலுள்ள வீரமுத்துக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றின் அருகே செவ்வாய்க்கிழமை மது அருந்திவிட்டு மதுபோதையில் கிணற்றில் குதித்த தெய்வீகன் மேலே ஏற முடியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தகவலறிந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்தினா் நிகழ்விடம் சென்று அவரது சடலத்தை மீட்டனா். இதுகுறித்த புகாரின்பேரில், வரஞ்சரம் போலீஸாா் புதன்கிழமை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.