பைக் மீது டிப்பா் லாரி மோதி பெண் மரணம்
கள்ளக்குறிச்சியில் வயதான தம்பதிகள் மோட்டாா் சைக்கிளில் சென்றபோது, பின்னால் வந்த டிப்பா் லாரி மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சியில் கவரை சாலைப் பகுதியில் வசிப்பவா் மதிவாணன் (60). இவரது மனைவி மனோரஞ்சிதம் (54). இருவரும் ஏமப்பேரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தனா்.
அண்ணாநகா் மின்சார வாரிய அலுவலகம் அருகே சென்றபோது, பின்னால் வந்த டிப்பா் லாரி மோதியதில், மதிவாணனும், மனோரஞ்சிதமும் தவறி கீழே விழுந்தனா். இதில் பலத்த காயமடைந்த மனோரஞ்சிதம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மதிவாணன் லேசான காயமடைந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் டிப்பா் லாரி ஓட்டுநரான க.மாமனந்தல் சாலை வ.உ.சி. நகரில் வசிக்கும் ராஜமாணிக்கம் (60) மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.