'இன்னொரு முறை இது நடந்தால் பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிடும்' - ஷேன் பாண்ட் சொல்வதென்ன?
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜஸ்பிரித் பும்ரா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி போட்டியின் போது பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் சிகிச்சை பெற்று வந்த இவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க முடியாமல் போனது.

தற்போது ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், இதிலும் முதல் இரண்டு வாரத்திற்கு பும்ராவால் பங்கேற்க முடியாது என்ற செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக வெளியாகி வருகின்றன. இந்நிலையில், ஜஸ்பிரித் பும்ரா குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஷேன் பாண்ட் பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பும்ரா குறித்து பேசிய ஷேன் பாண்ட், " பும்ராவிற்கு இன்னொரு முறை அதே இடத்தில் (முதுகில்) காயம் ஏற்பட்டால் அத்துடன் அவர் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிடும். ஏன்னென்றால் ஒரே இடத்தில் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யக் கூடாது. அப்படி நடந்தால் அதில் இருந்து மீண்டு வருவது கடினம்.

எனவே பும்ராவை பிசிசிஐ சரியாக கையாள வேண்டும். அவரை தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாட வைக்க வேண்டாம். அவரைப் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs