செய்திகள் :

Pakistan: ``தவறான முடிவுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் ஐ.சி.யு-வில் இருக்கிறது" - விமர்சிக்கும் அப்ரிடி

post image

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் லீக் சுற்றுலியே வெளியேறியது அந்நாட்டு முன்னாள் வீரர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இப்போது, அடுத்ததாக நியூசிலாந்துக்கெதிரான தொடருக்கு பாகிஸ்தான் அணி தயாராகி வருகிறது. இதில், டி20 தொடரில் முகமது ரிஸ்வான், பாபர் அசாம் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு சல்மான் அகாவை கேப்டனாகவும், சதாப் கானை திடீரென அணிக்குள் சேர்த்து துணைக் கேப்டனாகவும் நியமித்திருக்கிறார்கள்.

பாகிஸ்தான் அணி
பாகிஸ்தான் அணி

இவ்வாறிருக்க, திடீரென சதாப் கானை சேர்த்து, துணைக் கேப்டனாக நியமித்ததற்கெதிராக கேள்வியெழுப்பியிருக்கும் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி, தவறான முடிவுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் ஐ.சி.யு-வில் இருப்பதாக விமர்சித்திருக்கிறார்.

இது குறித்து பேசிய சாகித் அப்ரிடி, "எதன் அடிப்படையில் சதாப் கான் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார்? உள்நாட்டு கிரிக்கெட்டில் சதாப் கானின் செயல்திறன் என்ன? அவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதன் காரணங்கள் என்ன? நாம் எப்போதும் போட்டிக்குத் தயாராவது குறித்து பேசுகிறோம். தோல்வியடையும்போது அதிலிருந்து மீள்வது பற்றி பேசுகிறோம். ஆனால், உண்மையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தவறான முடிவுகளால்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் ஐ.சி.யு-வில் இருக்கிறது.

வாரியத்தின் முடிவுகளிலும் கொள்கைகளிலும் நிலையான தன்மை இல்லை. கேப்டன்கள், பயிற்சியாளர்கள் அல்லது சில வீரர்களை மாற்றிக்கொண்டே இருக்கிறோம். கிரிக்கெட் வாரிய அதிகாரிகளின் வேலைதான் என்ன? தங்களின் இடத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்காக வீரர்கள் மீது பயிற்சியாளர்களும், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் மீது நிர்வாகமும் பழிபோடுவது வருத்தமளிக்கிறது." என்று கூறினார்.

`அவர்கள் படித்தவர்களா?!'- ரிலையன்ஸ் மீது அப்ரிடி பாய்ச்சல்

மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொசின் நக்வி பற்றி பேசிய சாகித் அப்ரிடி, `பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மொசின் நல்லது செய்ய விரும்புகிறார். ஆனால், இறுதியில் அவர் ஆலோசனைகளை மட்டுமே நம்பியிருக்கிறார். ஒரே நேரத்தில் மூன்று வேலைகளைச் செய்ய முடியாது என்று அவரிடம் ஏற்கெனவே நான் கூறியிருக்கிறேன். ஏனெனில், கிரிக்கெட் வாரிய தலைவராக இருப்பது முழுநேர வேலை. எனவே, அவர் அந்த ஒரு வேலையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்." என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

'இன்னொரு முறை இது நடந்தால் பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிடும்' - ஷேன் பாண்ட் சொல்வதென்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜஸ்பிரித் பும்ரா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி போட்டியின் போது பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் சி... மேலும் பார்க்க

CT : `தொடர் நாயகன் விருதை இவருக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும்’ - யாரை சொல்கிறார் அஸ்வின்?

சாம்பியன்ஸ் டிராபி 8 வருடங்களுக்குப் பிறகு பல்வேறு விமர்சனங்கள், கொண்டாட்டங்கள், ஆதரவு என சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்திய அணி ஐந்தாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி, நியூசிலாந்திடம் ... மேலும் பார்க்க

Rishabh Pant: `IPL ஆடுவது பற்றி ஒருபோதும் நினைத்ததில்லை; என்னுடைய ஒரே கனவு...' - ரிஷப் பன்ட்

சாம்பியன்ஸ் ட்ராபி முடிந்த சூட்டோடு மார்ச் 22-ம் தேதி ஐ.பி.எல் தொடங்குகிறது. இதில், ஐ.பி.எல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 27 கோடிக்கு ஏலம் போன ரிஷப் பன்ட்டின் ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பைக் ... மேலும் பார்க்க

'நாங்கதான் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை நடத்தினோம்; ஆனா...’ - இறுதி போட்டி சம்பவம் குறித்து அக்ரம் வேதனை

தற்போது நடந்து முடிந்த சாம்பியன்ஸ் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால், இறுதிப்போட்டியின் முடிவில் ஒரு சர்ச்சை கிளம்பியது. அதாவது, இந்த சாம்பியன்ஸ... மேலும் பார்க்க

Shreyas Iyer: "கோப்பை வென்ற பிறகும் எனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை" - ஸ்ரேயஸ் வேதனை

இந்தியாவில் 2023-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பின்னர் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு, பி.சி.சி.ஐ ஒப்பந்தத்திலிருந்தும் நீக்கப்பட்ட ஸ்ரேயஸ் ஐயர், 2024-ல் ஐ.பி.எல் உட்பட உள்ளூர் கிரிக்கெ... மேலும் பார்க்க

K.L.Rahul: ``இறங்குற இடமில்ல; பண்ற சம்பவம்தான் முக்கியம்"- ராகுல் ஏன் கொண்டாடப்பட வேண்டியவர்?

சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்றிருக்கிறது. அத்தனை வீரர்களுமே அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதனால் இந்திய அணி சாம்பியன்ஸ் ... மேலும் பார்க்க