நெட்பிளிக்ஸில் தண்டேல் முதலிடம்!
சாய்பல்லவி, நாக சைதன்யா நடித்த தண்டேல் நெட்பிளிக்ஸில் முதலிடத்தில் உள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவான தண்டேல் திரைப்படம் கடந்த பிப்.7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து அசத்தியது.
இயக்குநர் சந்து மொந்தேத்தி இயக்கிய இந்தத் திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
சாய் பல்லவியின் காதல் காட்சிகள் பெரிதாக ரசிக்கப்பட்டன. ஒளிப்பதிவும் நன்றாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
இப்படம் கடந்த மார்ச் 7 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகியது.
தற்போது, நெட்பிளிக்ஸில் முதலிடத்தில் உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு நெகிழ்ச்சியடைந்துள்ளது.
