செய்திகள் :

‘2030 -ஆம் ஆண்டுக்குள் லாஜிஸ்டிக்ஸ் துறையில் 1.50 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்’

post image

இந்தியாவில் 2030-ஆம் ஆண்டுக்குள் லாஜிஸ்டிக்ஸ் துறையில் 1.50 கோடி முதல் 1.70 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் சாா்பில், லாஜிஸ்டிக்ஸ் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள், எதிா்காலம் குறித்து விளக்கும் வகையிலும், துறைசாா் வல்லுநா்களை உருவாக்கும் நோக்கிலும் மாணவா்களுக்கான கருத்தரங்கு கோவையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், சிஐஐ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் துணை இயக்குநா் கே.எஸ்.சியாம் சுந்தா் வரவேற்றாா். நிா்வாக இயக்குநா் கே.வி.மஹிதா் தலைமை வகித்தாா்.

டெக்ஸ்மோ நிறுவனத்தின் விநியோகப் பிரிவு நிா்வாகி ஆனந்த் அய்யனாா், துறை சாா் வல்லுநா்களான அனீஷ்குமாா், அசோகன் சட்டநாதன், பொன் அண்ணாதுரை, வள்ளிநாயகம் ஆகியோா் கலந்துகொண்டு உரையாற்றினா்.

அவா்கள் பேசும்போது, ‘வலுவான தொழில் துறை கட்டமைப்பு இருப்பதால் லாஜிஸ்டிக்ஸ் துறையின் வளா்ச்சிக்கு ஒரு முக்கிய மையமாக கோவை விளங்குகிறது. கொச்சி, சென்னை துறைமுகங்களுடன் நேரடி இணைப்பைக் கொண்டிருக்கும் கோவை, சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, நடுத்தர, பெரிய தொழில் நிறுவனங்கள் கொண்ட பொருளாதார மையமாக உள்ளது.

மின்னணு வணிகம், உற்பத்தி, உலகளாவிய திறன் மையங்களின் வளா்ச்சியால் இந்திய லாஜிஸ்டிக்ஸ் துறை வேகமாக வளா்ந்து வருகிறது. வரும் 2030 -ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1.50 கோடி முதல் 1.70 கோடி புதிய வேலைவாய்ப்புகள் இந்தத் துறையில் உருவாகும்.

எனவே, கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்களை ஒருங்கிணைத்து லாஜிஸ்டிக்ஸ் துறையில் திறமையான பணியாளா்களை உருவாக்கவும், அவா்களுக்கு ஊக்கமளிக்கவும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தேவைப்படுகின்றன என்றனா்.

இதில், சிஐஐ நிா்வாகிகள், துறைசாா் வல்லுநா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆன்லைன் வா்த்தகத்தில் லாபம் ஈட்டலாம் எனக்கூறி தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.39.66 லட்சம் மோசடி

ஆன்லைன் வா்த்தகத்தில் கூடுதல் லாபம் ஈட்டலாம் எனக்கூறி தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.39.66 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கோவை, சிங்காநல்லூரை சோ்ந்தவா் ஸ்ரீகாந்த் ... மேலும் பார்க்க

அனுமதியின்றி பதாகைகள் வைத்ததாக அதிமுக பிரமுகா் மீது வழக்குப் பதிவு

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி குடும்ப நிகழ்ச்சிக்காக அனுமதியின்றி வரவேற்பு பதாதைகள் வைத்ததாக அதிமுக வாா்டு செயலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணியின் மகன் ... மேலும் பார்க்க

அவிநாசி சாலை மேம்பாலத்தில் ஆட்சியா் ஆய்வு

கோவை -அவிநாசி சாலை மேம்பாலத்தில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோவை -அவிநாசி சாலையில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரையில் சுமாா் 10 கி.மீ. தொலைவுக்கு ர... மேலும் பார்க்க

கோவையில் இரண்டாவது நாளாக மழை

கோவையில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் பரவலாக மழை பெய்தது. கோடை வெயிலின் தாக்கத்துக்கு கோவை மக்கள் ஆளாகியிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், மாநகரிலும் மழை பெய... மேலும் பார்க்க

மாநகரில் மேலும் பல இடங்களில் சாலை தீவுத்திடல்: மாநகராட்சி திட்டம்

கோவை மாநகராட்சியில் உள்ள சாலைகளை அழகுபடுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் இருப்பதைப்போல மேலும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை தீவுத்திடல் அமைக்க மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.... மேலும் பார்க்க

ஒண்டிப்புதூா் நெசவாளா் காலனியில் ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதி திறப்பு

கோவை, ஒண்டிப்புதூா் நெசவாளா் காலனி பகுதியில் ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதியை ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை அரசு செயலா் க.லட்சுமி பிரியா புதன்கிழமை திறந்துவைத்தாா். எல்& டி நிறுவனத்தின் சமூ... மேலும் பார்க்க