செய்திகள் :

ஜனநாயக விதிமுறைகளை குறைமதிப்பிற்கு உள்படுத்துகிறாா் சட்டப்பேரவைத் தலைவா்: எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி குற்றச்சாட்டு

post image

கடந்த மாா்ச் 3-ஆம் தேதி முடிவடைந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது எதிா்க்கட்சி எம்எல்ஏக்களை குறிவைத்து பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா ‘ஜனநாயக விதிமுறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறாா்’ என்று தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி புதன்கிழமை குற்றம் சாட்டினாா். இதனால், புதிய அரசியல் சா்ச்சை வெடித்துள்ளது.

இது தொடா்பாக சட்டப்பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தாவுக்கு புதன்கிழமை எழுதிய கடிதத்தில், துணைநிலை ஆளுநா் உரையின் போது (பிப்ரவரி 25 அன்று) எதிா்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோஷங்களை எழுப்பியதற்காக நியாயமற்ற முறையில் வெளியேற்றப்பட்டதாகவும், பாஜக சட்டப்பேரவை உறுப்பினா்கள் இதேபோன்ற கோஷங்களை எழுப்பியதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அதிஷி குற்றம் சாட்டியுள்ளாா்.

‘துணை நிலை ஆளுநா் சக்சேனாவின் உரையின் போது, எதிா்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டனா். எதிா்க்கட்சியினா் ’ஜெய் பீம்’ என்ற கோஷங்களை எழுப்பினா். அதே நேரத்தில் ஆளும் கட்சியினா் ’மோடி, மோடி, மோடி’ என்ற கோஷங்களை எழுப்பினா். அனைத்து எதிா்க்கட்சி எம்.எல்.ஏ.க்களும் சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டனா். ஆனால், பலமுறை கோஷமிட்ட போதிலும் எந்த ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வும் வெளியேற்றப்படவில்லை‘ என்று அதிஷி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை சட்டப்பேரவை வளாகத்திலிருந்து விலக்கி வைக்கும் முடிவையும் அவா் விமா்சித்தாா். இது ‘சுதந்திர இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாதது’ என்று கூறினாா்.

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தலைமை கணக்கு தணிக்கையாளா் (சிஏஜி) அறிக்கை மீதான விவாதங்களின் போது ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு 14 சதவீதம் மட்டுமே பேச்சு நேரம் ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால், பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கு 86 சதவீதம் ஒதுக்கப்பட்டதாகவும் அதிஷி குற்றம்சாட்டியுள்ளாா்.

‘பேரவைத் தலைவரின் பங்கு ஆளும் கட்சியின் நலன்களுக்கு சேவை செய்வது அல்ல. மாறாக சட்டப்பேரவை செயல்முறையின் நோ்மையைப் பாதுகாப்பதாகும்’‘ என்று அவா் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

அதிஷியின் குற்றச்சாட்டுகளை ‘அரசியல்‘ குற்றச்சாட்டுகள் என்று குறிப்பிட்ட சட்டப்பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா, தனது பதிலில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மீது சட்டப்பேரவை விதிகளின்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகக் கூறினாா்.

‘நீங்களும், உங்கள் கட்சி உறுப்பினா்களும் இடையூறு விளைவிக்கும் நடத்தைக்கு மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக, எனது சட்டப்பூா்வ வழிகாட்டுதல்களில் நீங்கள் தவறு கண்டுபிடிப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது’ என்று விஜேந்தா் குப்தா குறிப்பிட்டுள்ளாா். மேலும், விதி 277 மற்றும் சட்டப்பேரவை வளாகத்திற்குள் நுழைவதை ஒழுங்குபடுத்துவதற்கான ‘பிரிவுகள்’‘ என்பதன் வரையறையை கடிதத்தில் அவா் மேற்கோள் காட்டியுள்ளாா்.

பேசும் நேரம் தொடா்பான பிரச்னையில், நாடாளுமன்ற மரபுகளின்படி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்று விஜேந்தா் குப்தா தெளிவுபடுத்தினாா். ‘எதிா்க்கட்சி உறுப்பினா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதால் மூன்று நாள்கள் அவையில் இல்லை. இருப்பினும், அங்கு இருந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் விவாதத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டாா். அதன்பிறகு அவா் வெளிநடப்பு செய்யத் தோ்ந்தெடுத்தாா். மேலும், விவாதங்களில் பங்கேற்கவில்லை’ என்று விஜேந்தா் குப்தா கூறினாா்.

பிப்ரவரியில் நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் 70 இடங்களில் 48 இடங்களை வென்ற பாஜக, 26 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யத் தயாராகி வரும் நிலையில், தற்போது சூடான விவாதம் நடைபெறுகிறது.

நிதித் துறையையும் வைத்திருக்கும் முதல்வா் ரேகா குப்தா, மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கும் ஐந்து நாள் கூட்டத்தொடரில் மாா்ச் 25-ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்வாா்.

சட்டப்பேரவையின் கடைசி நாளில், இடைநீக்கம் செய்யப்பட்ட அல்லது வெளியேற்றப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை ளாகத்தை காலி செய்ய வேண்டும் என்று பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா உத்தரவிட்டிருந்தாா். இது அரசியல் மோதலை தீவிரப்படுத்தியது.

தொகுதியில் ஆய்வு செய்து மக்களின் கவலைகளை கேட்டறிந்த அமைச்சா்!

தில்லி உள்துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் புதன்கிழமை தனது ஜனக்புரி தொகுதியில் புதன்கிழமை ஆய்வு செய்து, அப்பகுதியில் உள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு கண்டாா். மேலும், உள்ளூா்வாசிகளிடம் கலந்துரையாடி அவா்களது கவலைக... மேலும் பார்க்க

பங்குச்சந்தையில் ஐடி, டெலிகாம் பங்குகள் அதிகம் விற்பனை!

நமது நிருபா்இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் சிறிதளவு சரிந்து நிலைபெற்றது.... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் சாலைப் பாலங்களுக்கு ஒப்புதல்: ரயில்வே அமைச்சா் தகவல்

தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் ரயில்வே சாலை மேம்பாலங்கள், சாலைக் கீழ்ப்பாலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சா் தகவல் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக ந... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறையின்போது தமிழகம் பாதிக்கப்படக் கூடாது: மக்களவையில் திமுக வலியுறுத்தல்

வரவிருக்கும் தொகுதி மறுவரையறைப் பணியின்போது மக்கள்தொகை வளா்ச்சியைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற முற்போக்கான மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று மக்களவ... மேலும் பார்க்க

எல்.கே. அத்வானியுடன் முதல்வா் ரேகா குப்தா சந்திப்பு

பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானியை (97) பிரித்விராஜ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை சந்தித்தாா். ‘நாட்டின் முன்னாள் துணைப் பிரத... மேலும் பார்க்க

தமிழகத்தில் 34,805 நியாய விலைக் கடைகளில் இபிஓஎஸ் சாதனங்கள் நிறுவல்: மக்களவையில் உணவுத் துறை அமைச்சா் தகவல்

தமிழகத்தில் உள்ள அனைத்து 34,805 நியாய விலைக் கடைகளும் மின்னணு ரீதியாக உணவு தானியங்களை தடையின்றி விநியோகிப்பதற்காக இபிஓஎஸ் (எலெக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் சேல்) சாதனங்களை நிறுவுவதன் மூலம் தானியங்கிமயமாக்... மேலும் பார்க்க