செய்திகள் :

அவிநாசி அருகே வயதான விவசாய தம்பதியர் அடித்துக் கொலை

post image

அவிநாசி: அவிநாசி அருகே துலுக்கத்தூரில் வயதான விவசாய தம்பதியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் ஊஞ்சப் பாளையம் சாலை பெரிய தோட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி (82). இவரது மனைவி பருவதம்(75). விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர்களது மகன், மகள் இருவரும் திருமணமாகி வெவ்வேறு பகுதியில் வசித்து வருகின்றனர்.

தோட்டத்து வீட்டில் வயதான தம்பதியர் மட்டும் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் வயதான தம்பதியர் வெளியே வராததால், அருகில் இருந்தவர்கள் தோட்டத்துக்குள் சென்று பார்த்தபோது தம்பதியர் அடித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

திருப்பூர் விசைத்தறி நெசவாளர்கள் கூலி உயர்வு கோரி மார்ச் 19 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீஸார், இருவரது சடலத்தையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதியவர்கள் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்களா அல்லது தங்க நகை மற்றும் பணத்திற்காக கொலை செய்யப்பட்டார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வயதான விவசாய தம்பதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அவிநாசியில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பத்மஸ்ரீ விருது பெறவிருக்கும் பறை இசைக் கலைஞர் வேலு ஆசானுக்கு கல்லூரியில் பாராட்டு!

சென்னை: பத்மஸ்ரீ விருது பெறவிருக்கும் பறை இசைக் கலைஞர் வேலு ஆசானை, சென்னை ஏ.எம்ஜெயின்கல்லூரி கௌரவித்துப் பாராட்டியது. பறை இசை என்ற தமிழ்நாட்டின் தொன்மையான, பாரம்பரிய கலையை உயிர்ப்புடன் வைத்திருப்பதில்... மேலும் பார்க்க

40 ஆண்டுகளில் முதல் முறையாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! எரிமலை வெடிக்கும் அபாயம்?

இத்தாலி நாட்டின் நேப்பிள்ஸ் நகரத்தில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று (மார்ச் 13) நிகழ்ந்துள்ளது.நேப்பிள்ஸ் நகரத்தில் இன்று (மார்ச் 13) அதிகாலை 1.25 மணியளவில் 4.4 ரிக்டர் ... மேலும் பார்க்க

செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷ்-க்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

நாட்டில் 20 வயதுக்குட்டோருக்கான உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷ்-க்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.20 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி... மேலும் பார்க்க

தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில் 'ரூ' குறியீடு!

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இலச்சினையை ரூபாய் குறியீட்டிற்குப் பதிலாக 'ரூ' எனப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை(... மேலும் பார்க்க

காவல் துறையினருடன் துப்பக்கிச் சண்டை... குற்றவாளி படுகாயம்! கூட்டாளியுடன் கைது!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் சுந்தர்கார் மாவட்டத்தில் காவல் துறையினருடனான துப்பாக்கிச் சூட்டில் முக்கிய குற்றவாளி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.சுந்தர்கார் மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டைச் சேர்ந்த வழக்கில் தேடப்... மேலும் பார்க்க

தீவிரவாதிகளின் கூட்டளிகள் 2 பேர் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பண்டிபோரா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் பண்ட... மேலும் பார்க்க