செய்திகள் :

செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷ்-க்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

post image

நாட்டில் 20 வயதுக்குட்டோருக்கான உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷ்-க்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.20 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் உலக அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்குகொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

அந்த வகையில், சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மான்டினீக்ரோ நாட்டின், பெட்ரோவாக்கில் நடைபெற்ற நாட்டில் 20 வயதுக்குட்டோருக்கான உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று வரலாறு படைத்த தமிழக செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷை பாராட்டி உயரிய ஊக்கத்தொகையாக ரூ.20 லட்சத்துக்கான காசோலையை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.

பிரணவ் வெங்கடேஷ், 2022-ஆம் ஆண்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்திற்கு தகுதி பெற்றார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் சேலஞ்சர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற பிரணவ் வெங்கடேஷ்-க்கு பரிசு தொகையாக ரூ. 6 லட்சம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி மற்றும் பிரணவ் வெங்கடேஷ் பெற்றோர் உடனிருந்தனர்.

முதல்வர் ஸ்டாலின் தனது பெயரை தமிழில் மாற்றத் தயாரா? - தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பெயரை தமிழில் மாற்றிக்கொள்ளட்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். 2025-2026 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் நாளை(மார்ச் 14) ... மேலும் பார்க்க

திபெத்தில் தொடர் நிலநடுக்கம்...! பீதியில் மக்கள்!

சீனாவின் தன்னாட்சி பகுதியான திபெத்தில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. திபெத்தின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் இன்று (மார்ச் 13) அதிகாலை 01.42 மணியளவில் ... மேலும் பார்க்க

இந்திய எல்லையில் பாகிஸ்தான் டிரோன்கள் வீசிய போதைப் பொருள்கள் பறிமுதல்!

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள இந்திய எல்லையில் பாகிஸ்தானிலிருந்து டிரோன் மூலம் கடத்தப்பட்ட போதைப் பொருள் பொட்டலங்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். பாகிஸ்தானிலிருந்து கட்டுப்படுத்தப்ப... மேலும் பார்க்க

பாமக எம்எல்ஏ மீது திமுகவினர் தாக்குதல்: அன்புமணி கண்டனம்!

சேலத்தில் முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாலக்குட்டப்பட்டியில் பள்ளிக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவுக்குச் சென்ற பாமக எம்எல்ஏ அருள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இ... மேலும் பார்க்க

சிறைப்பிடிப்பு எதிரொலி: பாக். பிரதமர் பலூசிஸ்தான் பயணம்!

பாகிஸ்தான் நாட்டில் பயணிகள் ரயில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பலூசிஸ்தான் மாகாணத்திற்கு அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் பயணம் மேற்கொள்கின்றார். பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மார்ச்.11 அன்று குவேட்டாவி... மேலும் பார்க்க

கொலையில் முடிந்த ஆடு,கோழி மேய்ச்சல் பிரச்னை: உறவினர் கைது

அவிநாசி அருகே ஆடு,கோழி மேய்ச்சல் பிரச்னையால் வயதான விவசாய தம்பதியரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிய உறவினர் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அவிநாசியில் ... மேலும் பார்க்க