அமெரிக்க விஸ்கிகளுக்கு வரிவிதித்தால் ஐரோப்பிய மது வகைகளுக்கு 200% வரி! -டிரம்ப்
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் சையத் அபித் அலி காலமானார்!
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த ஆல்ரவுண்டர் சையத் அபித் அலி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.
ஆல்ரவுண்டரான சையத் அபித் அலி ஃபீல்டிங்கிக்கு பெயர் பெற்றவர். இவர் 1967 ஆம் ஆண்டு அடிலெய்டில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். அறிமுகப் போட்டியிலேயே 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அதே தொடரில் சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களில் 78 மற்றும் 81 ரன்கள் விளாசினார்.
1967 ஆம் ஆண்டு முதல் 1974 ஆம் ஆண்டு வரை விளையாடிய சையத் அபித் அலி இந்தியாவுக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 1,018 ரன்களும், 47 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்தவரான சையத் அபித் அலியின் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் மட்டுமின்றி, கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.