TASMAC: "டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடி ஊழல்" - குற்றச்சாட்டுகளை அடுக்கும் அமலாக்கத...
நாளை திரையரங்குகளில் வெளியாகும் 10 தமிழ் படங்கள்!
இந்த வாரம் திரையரங்குகளில் 10 தமிழ் படங்கள் வெளியாகவுள்ளது. நாளை(மார்ச் 14) எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காண்போம்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்து இசையமைத்து இருக்கும் திரைப்படம் ஸ்வீட் ஹார்ட். இப்படத்தை நடிகர் ரியோ ராஜ் நடிக்க அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கியுள்ளார். இப்படம் நாளை(மார்ச் 14) திரையரங்குகளில் வெளியாகிறது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடிகர் வைபவ் நடித்துள்ள பெருசு திரைப்படம் நாளை வெளியாகிறது.
இதையும் படிக்க: பராசக்தியில் பாசில் ஜோசஃப்?
இயக்குநர் கே. ரங்கராஜ் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல். பிரதான பாத்திரங்களில் ஸ்ரீகாந்த், பூஜிதா ஆகியோர் நடித்துள்ள இப்படம் நாளை வெளியாகிறது.
மேலும் டெக்ஸ்டர், குற்றம் குறை, மாடன் கொடை விழா, வருணன், ராபர் உள்ளிட்ட திரைப்படங்கள் நாளை வெளியாகின்றன.
இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் மற்றும் ரவி மோகனின் எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி ஆகிய படங்கள் நாளை ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.