திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் பொங்கல் விழா: லட்சக்கணக்கான பெண்கள...
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதல் கதையான காதல் என்பது பொதுவுடமை படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் நாளை(மார்ச் 14) வெளியாகிறது.
பாலாஜி முருகதாஸ் - ரச்சிதா மகாலட்சுமி நடிப்பில் வெளியான ஃபயர் திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் நாளை காணலாம்.
சுசீந்திரன் இயக்கிய 2கே லவ் ஸ்டோரி படத்தை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளை பார்க்கலாம்.
அப்பா மகன் உறவை அடிப்படையாகக் கொண்டு சமுத்திரக்கனி நடிப்பில் உருவான ராமம் ராகவம் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் நாளை வெளியாகிறது.
இதையும் படிக்க: திரையரங்குகளில் நாளை வெளியாகும் 10 தமிழ் படங்கள்!
குணா சுப்பிரமணியன் இயக்கத்தில் நடராஜன் இயக்கத்தில் வெளியான சீசா திரைப்படத்தை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளை பார்க்கலாம்.
பசில் ஜோசப் நடிப்பில் வெளியான மலையாள மொழிப்படமான பொன்மான் படத்தை ஜியோ ஹாட் ஸ்டாரில் நாளை காணலாம்.
இப்படங்கள் அல்லாமல் குடும்பஸ்தன் திரைப்படத்தை ஜீ5 ஓடிடி தளத்திலும் தண்டேல் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியிலும் குழந்தைகள் முன்னேற்றக் கழகம் படத்தை ஆஹா தமிழ் ஓடிடியிலும் காணக் கிடைக்கின்றன.