கச்சத்தீவு திருவிழா: தமிழர்களின் பாதுகாப்புக்குச் செல்லும் கடற்படைக் கப்பல்கள், ...
பெனால்டியில் நடுவரின் தவறான முடிவு: ஸ்பெயின் ஊடகங்கள் கடும் விமர்சனம்..!
சாம்பியன்ஸ் லீக்கில் முக்கியமான போட்டியில் பெனால்டி குறித்த முடிவு சர்ச்சையாகியுள்ளது.
சாம்பியன்ஸ் லீக்கில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அத்லெடிகோ மாட்ரிட் ரியல் மாட்ரிட் உடன் மோதியது. 1-0 என முன்னிலை வகிக்க முதல் சுற்றில் ரியல் மாட்ரிட் 1-0 என வென்றதால் இந்தப் போட்டி சமனில் முடிவடைந்தது.
பின்னர் கூடுதல் நேரம் ஒத்துக்கியும் முடிவு எட்டப்படாததால் ஆட்டம் பெனால்டிக்கு சென்றது.
என்ன சர்ச்சை?
பெனால்டியில் ரியல் மாட்ரிட் 4-2 என வென்றது. இதில் அத்லெடிகோ மாட்ரிட் அணி வீரர் ஜூலியன் அல்வராஸ் பெனால்டியில் கோல் அடித்தார்.
இந்த கோல் டபுள் டச் (இருமுறை பந்தினை தொடுதல்) ஆனதாக நடுவரின் முடிவினால் (விஏஆர்) கோல் இல்லை என தீர்மானிக்கப்பட்டது.
ரியல் மாட்ரிட் அணி வீரர்கள் அது ‘டபுள்-டச்’ என்றும் அத்லெடிகோ மாட்ரிட் அணி வீரர்கள் அப்படி எதுவும் இல்லை என்றனர்.
யாராவது பார்த்திருந்தால் கையை உயர்த்துங்கள்?
இந்நிலையில் அத்லெடிகோ மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் தியாகோ சியோமின் கூறியதாவது:
நீங்கள் பார்த்தீர்களா? அல்வரெஸ் பந்தினை இரண்டு முறை தொட்டாரா? பேசுவதற்கு பயமாக இருக்கிறதா? பேசினால் தண்டனை கிடைக்குமென நினைக்கிறீர்களா? பயந்தீர்களேயானால் எதுவும் பேசாதீர்கள். ஜூலியன் இரண்டு முறை பந்தினை தொட்டதை யாராவது பார்த்திருந்தால் கையை உயர்த்துங்கள் பார்க்கலாம்? யாருமில்லை தானே?
உண்மையில், நான் பொய் சொல்லவேண்டியதில்லை. இதுமாதிரி போட்டியிலிருந்து வெளியேறினால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
ஸ்பெயின் ஊடகங்கள் சொல்வதென்ன?
இடதுகால் வழுக்கிச் சென்றதே தவிர அது பந்தினை தொடவில்லை. வலதுகாலில் பந்தினை அடித்ததும் இடதுகால் பந்தினை தொடவே இல்லை. அதற்கு முன்பாகவும் பந்தினை எங்கேயும் தொடவில்லை.
ஒருவேளை, விடியோ அசிஸ்டன்ட் நடுவர் இதைவிட தெளிவான படத்தைப் பார்த்திருக்கலாம் அல்லது நடுவர் பொலிஷ் மார்சினிக் மோசமாக அறிவுரை செய்திருப்பார்.
தெளிவான படம் இல்லாமல் ஏன் இந்தமாதிரி நிலைகுலைய வைக்கும் முடிவினை கூறினார்கள் என ஸ்போர்ஷ்ட் ஊடகம் கருத்து தெரிவித்துள்ளது.
More footage of Julian Alvarez’s penalty.
— Atletico Universe (@atletiuniverse) March 13, 2025
You decide if it was a double touch.pic.twitter.com/zpHZwnpRT0