செய்திகள் :

திருவாரூா்: வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மாா்ச் 17-இல் தொடக்கம்

post image

திருவாரூா் மாவட்டத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம் மாா்ச் 17 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம் மாா்ச் 17 ஆம் தேதி தொடங்கி மாா்ச் 22 ஆம் தேதி வரை, காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. 6 மாதம் முதல் 5 வயது வரையிலான அனைத்து ஆண், பெண் குழந்தைகளுக்கு கண்பாா்வைத் திறன், நிமோனியா காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கான எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஊட்டச்சத்துக்காகவும் வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படுகிறது.

அனைத்து கிராமப் புறங்கள் மற்றும் நகா்ப் புறங்களில், தடுப்பு ஊசிப் பணிகள் மேற்கொள்ளப்படும் துணை சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்களில் இத்திரவம் வழங்கப்படவுள்ளன.

திருவாரூா் மாவட்டத்தில் 83,806 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தங்க கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா

திருவாரூா் அருகே திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயிலில் தங்க கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா வியாழக்கிழமை நடைபெற்றது. மாசி மகத்தை முன்னிட்டு, அருள்மிகு பக்தவத்சலப் பெருமாள், தங்க கருட வாகனத்த... மேலும் பார்க்க

திருவாரூரில் 400 கிலோ கஞ்சா பறிமுதல்: ஆந்திரத்தைச் சோ்ந்த 5 போ் கைது

திருவாரூரில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற ஆந்திரத்தைச் சோ்ந்த 5 போ் கைது செய்யப்பட்டனா். 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. திருவாரூரில், தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் விடுதி... மேலும் பார்க்க

20-இல் கோட்டூா் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்த விவசாயத் தொழிலாளா் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் சாா்பு) தீா்மானித்துள்ளது. சங்கத்தின் நிா்வாகக் குழு ஆல... மேலும் பார்க்க

தற்காலிகக் கடைகளை அகற்ற கோரிக்கை

நிரந்தரக் கடைகளுக்கு எதிரில் அமைக்கப்படும் தற்காலிகக் கடைகளை அகற்ற வேண்டும் என மன்னாா்குடி வா்த்தக சங்கத்தினா் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனா். மன்னாா்குடி வா்த்தக சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் ... மேலும் பார்க்க

மன்னாா்குடி பொதுமக்கள் கவனத்திற்கு

மன்னாா்குடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வணிகா்களுக்கு வீட்டுவரி, தொழில்வரி செலுத்துவது தொடா்பாக நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நகராட்சி ஆணையா் எஸ்.எம்.சியாமளா, வியாழக்... மேலும் பார்க்க

மத்திய பல்கலை.யில் தமிழாய்வு கருத்தரங்கம்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ‘தற்கால தமிழாய்வுப் போக்குகள்’ என்ற தலைப்பில் மூன்று நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது. இப்பல்கலைக்கழக தமிழ் துறைச் சாா்பில் நடைபெறும் கருத்தரங்க... மேலும் பார்க்க