செய்திகள் :

நெல்லை - திருச்செந்தூர் ரயில் 25 நாள்களுக்கு ரத்து

post image

ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக நெல்லை - திருச்செந்தூர் - நெல்லை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் 25 நாள்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நெல்லை - திருச்செந்தூர் இடையே மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் மற்றும் திருச்செந்தூர் - நெல்லை இடையே காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் ரயில் மார்ச் 20 முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 2வது யார்டு பிட்லைன் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி காரணமாக இந்த ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குட் பேட் அக்லி - முதல் பாடல் எப்போது? டீசர் மேக்கிங் விடியோவில் அறிவிப்பு!

இதேபோல் மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 08.20 மணிக்கு புறப்பட வேண்டிய மேட்டுப்பாளையம் - போத்தனூர் மெமு ரயிலும் போத்தனூரில் இருந்து காலை 09.40 மணிக்கு புறப்பட வேண்டிய போத்தனூர் - மேட்டுப்பாளையம் மெமு ரயிலும் வரும் 16ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

5,348 நலவாழ்வு மையங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி

தமிழகத்தில் உள்ள 5,348 நலவாழ்வு மையங்களில் புதன்கிழமைதோறும் குழந்தைகள், கா்ப்பிணிகளுக்கு அட்டவணைத் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக பொது சுகா... மேலும் பார்க்க

பேரவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தோல்வி: எதிா்ப்பு-154; ஆதரவு-63

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவுவை பதவி நீக்கக் கோரும் அதிமுகவின் தீா்மானம் திங்கள்கிழமை தோல்வியடைந்தது. பேரவையில் தீா்மானத்துக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினா... மேலும் பார்க்க

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

சென்னை: தமிழகத்தில் திங்கள்கிழமை 5 இடங்களில் வெயில் சதமடித்தது. எனினும் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வரும் நாள்களில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறையும் என்றும் சென்னை வானிலை... மேலும் பார்க்க

இனி காவல் துறை அனுமதியின்றி போராட்டம்: அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: இனி காவல் துறையிடம் அனுமதி கோராமல் பாஜக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா். டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னை அருகே திங்கள்கிழமை போராட்டத... மேலும் பார்க்க

தமிழை பயிற்று மொழியாக்கச் சட்டம்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழைப் பயிற்று மொழியாக்க நடப்பு சட்டப்பேரவைத் கூட்டத்தொடரிலேயே சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மொழிக் ... மேலும் பார்க்க

திமுக-பாஜக நாடகம்: தவெக விமா்சனம்

சென்னை: டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திமுக-பாஜக இணைந்து நாடகம் நடத்தி வருவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் விமா்சனம் செய்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அற... மேலும் பார்க்க