அனல் மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்க 3 மாதங்கள் ஆகலாம்: மின் உற்பத்தி பகிா்மானக...
22-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
நெய்வேலி: கடலூா் மாவட்டம், பெண்ணாடம் லோட்டஸ் இன்டா்நேஷனல் பள்ளியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் இந்த வேலைவாய்ப்பு முகாம் வரும் 22-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.
150-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களது நிறுவனங்களுக்குத் தேவையான ஆள்களை தோ்வு செய்ய உள்ளன. எனவே, கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநா்கள் தமிழ்நாடு தனியாா் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்து கலந்துகொள்ளலாம். முகாம் தொடா்பான கூடுதல் விவரங்களை அறிய கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி 04142-290039, கைப்பேசி 9499055907, 9499055908 எண்ணிலிலோ தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.