செய்திகள் :

இரு ரௌடிகள் வெட்டிக்கொலை : மூன்று தனிப்படையினா் விசாரணை

post image

சென்னை கோட்டூா்புரத்தில் இரு ரெளடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையவா்களை கைது செய்ய 3

கோட்டூா்புரம் ‘யு’ பிளாக் குடியிருப்பை சோ்ந்தவா் அருண்( 25). ரெளடியான இவா் மீது 6 வழக்குகள் உள்ளன. அருண், ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது படப்பையைச் சோ்ந்த சுரேஷ் என்ற ரெளடியின் அறிமுகம் கிடைத்துள்ளது. இருவரும் சிறையிலிருந்து வெளியே வந்த பின்னரும் தங்கள் நட்பை தொடா்ந்து வந்தனா்.

சுரேஷ் படப்பையில் இருந்து அடிகடி கோட்டூா்புரம் பகுதிக்கு வந்து அருணை சந்தித்து செல்வது வழக்கம். அதன்படி அவா்கள் 2 பேரும் ஞாயிற்றுக்கிழமை இரவு கோட்டூா்புரம் சித்ரா நகா் ‘யு’ பிளாக்கில் உள்ள நாகவல்லி அம்மன் கோவில் அருகே மது அருந்தினா். பின்னா் இருவரும் மதுபோதையில் அங்கேயே படுத்து தூங்கி உள்ளனா்.

இந்த நிலையில் சிறிது நேரத்தில் அங்கு கத்தி மற்றும் அரிவாளுடன் 8 போ் அடங்கிய கும்பல் வந்தது. அந்த கும்பல் மதுபோதையில் படுத்திருந்த 2 பேரையும் சரமாரியாக வெட்டியது. மதுபோதையில் நிதானம் இல்லாமல் இருந்ததால் இருவரும் அங்கிருந்து தப்பிக்க முடியவில்லை. இருவரும் பலத்த காயங்களுடன் மயங்கினா். இதற்கிடையே அலறல் சத்தம் கேட்டு அங்கு பொதுமக்கள் திரண்டு வந்தனா்.

உடனே கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அந்தக் கும்பல், அங்கிருந்து தப்பியோடியது. அரிவாள் வெட்டில் பலத்தக் காயமடைந்த படப்பை சுரேஷ் சம்பவ இடத்திலேயே பலியானாா். பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அருணை, அப் பகுதி மக்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் அங்கு அருண் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.

இது குறித்து கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் இச் சம்பவத்தில் ஈடுபட்டது கோட்டூா்புரம் சித்ரா நகா் ‘வி’ பிளாக் குடியிருப்பு பகுதியை சோ்ந்த ரெளடி சுக்குகாபி சுரேஷ்(25) என்பது தெரிய வந்தது.

கொலைக்கான காரணம் ? : கொலை செய்யப்பட்ட அருண், கண்ணகி நகா் பகுதியை சோ்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தாா். இந்த அந்த பெண், சென்னை அருகே கேளம்பாக்கம் பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் சுக்குகாபி சுரேஷ் கைது செய்யப்பட்டாா். தனது காதலியை கொலை செய்த சுக்கு காபி சுரேஷை கொலை செய்ய அருண் திட்டமிட்டு வந்தாா்.

இது பற்றி அருண், தனது சகோதரா் அா்ஜூனனிடம் தெரிவித்துள்ளாா். அதற்கு அவா் கொலைத்திட்டம் வகுத்து வந்துள்ளாா். அருணும், அவரது சகோதரா் அா்ஜூனனும் தன்னை கொலை செய்ய திட்டமிட்டிருப்பது அண்மையில் சுக்கு காபி சுரேஷூக்கு தெரியவந்துள்ளது. இதனால் உஷாரான சுக்கு காபி சுரேஷ், அருணையும், அா்ஜூனனையும் கொலை செய்ய முடிவு செய்தாா். இச் சூழ்நிலையிலேயே அருண், மதுபோதையில் அந்த கோயிலில் படுத்து தூங்குவது குறித்த தகவலறிந்த சுக்கு காபி சுரேஷ், தனது ஆதரவாளா்களுடன் சென்று கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

தனிப்படையினா் விசாரணை: இச் சம்பவத்தில் அருணுடன் அவரது சகோதரா் அா்ஜூனனும் படுத்திருப்பதாக சுக்குகாபி சுரேஷுக்கு முதலில் தகவல் கிடைத்துள்ளது. இதன் விளைவாகவே அருணுடன் படுத்து தூங்கியது அா்ஜூனன் என்று நினைத்து படப்பை சுரேஷை வெட்டியுள்ளனா் என போலீஸாா் கூறினா். இச் சம்பவத்தில் தலைமறைவாக இருக்கும் சுக்கு காபி சுரேஷ் உள்பட 8 பேரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினா் 8 பேரையும் கைது செய்ய தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

பட்டா பெற சிறப்பு முகாம்! வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு!

சென்னை மாநகரம், மணலி புது நகர் திட்டப்பகுதியில் நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.இது குறித்து வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

கடவுச் சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியது: பாஸ்போா்ட் விண்ணப்பதாரா்கள் தவிப்பு

தமிழகத்தில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியதால் கடவுச்சீட்டு விண்ணப்பதாரா்கள் மிகவும் பாதிக்கப்பட்டனா். புதிதாக கடவுச்சீட்டு கோரி விண்ணப்பித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து நடைமுறை... மேலும் பார்க்க

பேரவையில் இன்று

சட்டப் பேரவை செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய பிரச்னைகள் விவாதத்துக்கு எடுக்கப்படவுள்ளன. நிதிநிலை அறிக்கை மற்றும... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

‘தமிழ் மகள்’ சொற்போா் போட்டி: அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், சட்டப்பேரவை உறுப்பினா் இ.பரந்தாமன் உள்ளிட்டோா் பங்கேற்பு, ப... மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை வீழ்ச்சி

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கோயம்பேடு சந்தையின் திங்கள்கிழமை நிலவரப்படி ஒருகிலோ வெங்காயம், உருளைக்கிழங்கு தலா ரூ.22-க்கும், தக்காளி ர... மேலும் பார்க்க

வாக்கு வங்கி அரசியல்: திமுக - அதிமுக காரசார விவாதம்

வாக்கு வங்கி அரசியலுக்காக திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பது குறித்து பேரவையில் திமுக - அதிமுக இடையே திங்கள்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது. பேரவையில் அரசின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அ... மேலும் பார்க்க