இன்றைய பாலிவுட் பிரபலங்களை விட மிக அதிகம்... 80 வயதில் அமிதாப் பச்சன் செலுத்திய ...
இலங்கை கடற்படைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! சீமான் அறிவிப்பு!
தமிழக மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படையின் நடவடிக்கையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையை எதிர்த்து, நாம் தமிழர் கட்சி மீனவர் பாசறை சார்பாக வருகிற சனிக்கிழமையில் (மார்ச் 23), ராமேஸ்வரம் - தங்கச்சிமடம், வலசை பேருந்து நிறுத்தம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
மீண்டும் இன்று ( 18.03.2025 ) மூன்று இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது..!
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) March 18, 2025
வெறும் கண்டனங்களால் காயங்கள் ஆறப்போவதுமில்லை..!
வெற்று கடிதங்களால் கைது செய்யப்படுவது நிற்கப்போவதுமில்லை..!
கடலில் இறங்கும் நம் மீனவச்சொந்தங்களைக் காக்க..!
களத்தில் இறங்க வாருங்கள்...… pic.twitter.com/hkRfFuUXEs
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து திங்கள்கிழமை 403 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது கென்னடி என்பவரது படகை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.
மேலும், படகில் இருந்த மீனவர்கள் சங்கர், அர்ச்சுணன், முருகேசன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க:பொதுத்துறை நிறுவனத்திடம் மர்ம கும்பல் மோசடி! ஒரு எழுத்தால் ரூ. 54 லட்சம் இழப்பு!