செய்திகள் :

Modi: "இசைஞானியின் இணையற்ற இசைப் பயணத்தில் மற்றொரு அத்தியாயம்" - தமிழில் வாழ்த்துச் சொன்ன மோடி

post image
கடந்த மாதம் மார்ச் 8ம் தேதி லண்டனில் 'சிம்பொனி 01 'Valiant'' சிம்பொனியை இசையமைப்பாளர் இளையராஜா அரங்கேற்றம் செய்தார்.

பண்ணைப்புரம் கிராமத்திலிருந்து கிளம்பி லண்டன் அப்பல்லோ அரங்கில் முதன்முதலாக சிம்பொனியை அரங்கேற்றியிருக்கும் இளையராஜாவிற்கு அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் பெருமையோடு வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளையராஜாவின் அரை நூற்றாண்டு கால திரை இசை பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவு செய்துள்ளதாக மகிழ்ச்சிப் பொங்க அறிவித்திருக்கிறார்.

லண்டன் சிம்பொனி அரங்கேற்றத்தில் இளையராஜா

இந்நிலையில் இன்று பிரதமர் மோடியைச் சந்தித்த இளையராஜா, "மதிப்பிற்குரிய பிரதமர் மோடி ஜியை சந்தித்து எனது சிம்பொனி 01 'Valiant' குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் உரையாடி அவரது வாழ்த்தையும், ஆதரவையும் பெற்றுக் கொண்டேன்" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்துத் தற்போது மோடி, "நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு இளையராஜா அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இசைஞானியான அவரது மேதைமை நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லா வகையிலும் முன்னோடியாக இருக்கும் அவர், சில நாட்களுக்கு முன் லண்டனில் தனது முதலாவது மேற்கத்திய செவ்வியல் சிம்பொனியான வேலியண்ட்டை வழங்கியதன் மூலம் மீண்டும் வரலாறு படைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி, உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த முக்கியமான சாதனை, அவரது இணையற்ற இசைப் பயணத்தில் மற்றொரு அத்தியாயத்தைக் குறிக்கிறது - உலக அளவில் தொடர்ந்து மேன்மையுடன் விளங்குவதை இது எடுத்துக்காட்டுகிறது." என்று தமிழில் வாழ்த்துச் சொல்லி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இது தொடர்பாக வெளியாகியிருக்கும் புகைப்படங்களில் இளையராஜா, பிரதமர் மோடியிடம் தனது இசைக் குறிப்புகளைக் காண்பித்து, சிலாகித்துப் பேசும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

`ஊதியம் கிடையாது' - போராட்டம் அறிவித்த அரசு ஊழியர்களுக்கு, தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும், காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நீண்ட... மேலும் பார்க்க

``தெரு நாய்களின் எண்ணிக்கையை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்...'' - கார்த்திக் சிதம்பரம் கடிதம்!

காங்கிரஸ் எம்.பி-யான கார்த்திக் சிதம்பரம் சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "சென்னை மாநகராட்சியில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரு நாய்களின் எண்ணிக்கை... மேலும் பார்க்க

Trek Tamilnadu: `3 மாதங்களில் ரூ.63.43 லட்சம் வருவாய்; அர்த்தமுள்ள சுற்றுலா' - முதல்வர் ஸ்டாலின்

கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசு சார்பில் 40 இடங்களில் மலையேற்றம் செல்வதற்கான இணையவழி முன்பதிவு இணையதளத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.எளிமையான, மிதமான, கடினமான மலையேற்றம் என... மேலும் பார்க்க

Caste Census: `பாஜக-வை விமர்சிக்க மறுக்கிறாரா சீமான்?’ - குற்றச்சாட்டும் நாதகவின் விளக்கமும்!

பெரியார் விமர்சனத்திலேயே தேங்கி நின்ற நாம் தமிழர் கட்சி, சமீப நாட்களாக சாதிவாரிக் கணக்கெடுப்பு, பஞ்சமி நில மீட்பு உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதானப் படுத்தியுள்ளது. அடுத்தாக மீனவர்கள் கைதை கண்டித்து ஆர்ப்ப... மேலும் பார்க்க

TVK Vijay: மீண்டும் துளிர்க்கிறதா தவெக, நாதக நட்பு? - பரவும் தகவலும் பின்னணியும்!

தமிழக வெற்றிக் கழக தரப்பு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்திக்க விரும்புவதாக தூது அனுப்பியிருப்பதாக வெளிவரும் தகவல்கள் தமிழக அரசியலில் அனலை கிளப்பியிருக்கிறது. இதுகுறித்த விசாரண... மேலும் பார்க்க

Lex Fridman: எலான் மஸ்க் டு மோடி வரை... முக்கிய ஆளுமைகளை நேர்காணல் செய்த லெக்ஸ் ஃப்ரிட்மேன் யார்?

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, செயற்கை நுண்ணறிவு ஆய்வாளரும் பாட்காஸ்டருமான அமெரிக்காவின் லெக்ஸ் ஃப்ரிட்மேன் கிட்டத்தட்ட 3 மணிநேரம் நேர்காணல் செய்திருக்கிறார்.உலக அமைதி, இந்தியா புத்தர் மற்றும் காந்தி... மேலும் பார்க்க