செய்திகள் :

TVK Vijay: மீண்டும் துளிர்க்கிறதா தவெக, நாதக நட்பு? - பரவும் தகவலும் பின்னணியும்!

post image

தமிழக வெற்றிக் கழக தரப்பு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்திக்க விரும்புவதாக தூது அனுப்பியிருப்பதாக வெளிவரும் தகவல்கள் தமிழக அரசியலில் அனலை கிளப்பியிருக்கிறது. இதுகுறித்த விசாரணையில் இறங்கினோம்.

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை கடந்தாண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய சமயத்தில், `"விஜய் அரசியல் கட்சி தொடங்குவது ஆரோக்கியமானதாக இருக்கும். தமிழ்நாட்டின் உரிமைக்காக அண்ணன் மட்டும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார், அவருக்கு உறுதுணையாக நிற்போம் என விஜய் நினைத்திருக்கலாம்" என வாயார வாழ்த்தி விஜய்யை வரவேற்றார்.

தவெக - விஜய்
தவெக - விஜய்

விஜய்யும் சீமானும் அடிக்கடி சந்தித்து ஆலோசிப்பதாக தகவல்கள் பரவியபோது, "அண்ணனும், தம்பியும் சந்திப்பது வழக்கம். அப்படித்தான் நானும் விஜய்யும் சந்தித்துக் கொள்கிறோம். இப்ப நாட்டுல பிரச்னை அண்ணனும் தம்பியும் சேர்ந்துவிடக்கூடாது என்பதுதானே..." எனப் பேசிவந்தார். பின்னர், த.வெ.க-வின் முதல் மாநில மாநாட்டில் `திராவிடமும் தமிழ்தேசியமும் இம்மண்ணின் கண்கள் எனவும் பெரியாரை கொள்கைத் தலைவராக பிரகடனப்படுத்திய பிறகும் சீமான் - விஜய் உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கின,

'உன்னுடையது கொள்கையல்ல, கூமுட்டை... அதுவும் அழுகின கூமுட்டை', 'ஒன்னு சாலைக்கு அந்தப்பக்கம் நில்லு, இல்லை இந்தப் பக்கம் நில்லு. நடுவுல நின்னா லாரி அடிச்சு செத்துருவ' என ஏக வசனத்தின் விஜய்யை சாடினார் சீமான். "அண்ணன் தம்பி வேற, கொள்கை வேற... கொள்கைனு வந்துவிட்டால் பகைதான்" என விஜய்க்கு எதிராக தீவிரமாகவே களமிறங்கியது நாம் தமிழர் கட்சி.

சீமான்

சீமான் தரப்பு கடுமையாக விமர்சித்ததை த.வெ.க-வும் வேடிக்கைப் பார்க்கவில்லை, தேர்தல் வியூக வகுப்பாளரை கொண்டு அரசியல் செய்வதை பணக்கொழுப்பு என சீமான் விமர்சித்தபோது ``ஒவ்வொரு தேர்தலிலும் கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட அண்ணன் சீமான் இன்னும் எத்தனை ஆண்டுகள் "வென்றால் மகிழ்ச்சி,.தோற்றால் பயிற்சி" என்று நாம் தமிழர் உறவுகளை உசுப்பேத்திக் கொண்டே இருக்கப் போகிறாரோ தெரியவில்லை?

திரள் நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள அண்ணன் சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவது ஆச்சரியமன்று. நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவதற்காக அரசியல் செய்கிறோம், நீங்கள் பட்டிமன்றத்தில் பேசுவது தான் அரசியல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்” என கடுமையாக எதிர்வினையாற்றியது.

இதுபோன்ற வார்த்தைப் போருக்கு மத்தியில் விஜய் தரப்பு, சீமானை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக ஒரு தகவல் கசிகின்றது. இதுகுறித்து விரிவாகப் பேசிய விவரமறிந்தவர்கள், ``நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்திக்க த.வெ.க-வின் வியூக வகுப்பு குழுவின் முக்கிய புள்ளிகள் அப்பாயிண்மெண்ட் கேட்டிருப்பதற்கு பின்னால் ஆளும்கட்சிக்கு எதிரான கூட்டணி வியூகமாகவும் இருக்கலாம். அதேசமயம், அரசியல், கொள்கை எதிரிகளை தாண்டி மற்ற கட்சிகளை நட்பு சக்திகளாக அணுக த.வெ.க முயற்சிக்கிறது. அதற்கான முன்னெடுப்பாகவும் இருக்கும்” என்றார்கள்.

சீமான், விஜய்

இதைமறுத்தும் பேசும் நா.த.க நிர்வாகிகள் சிலர் ``நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது. . ஒருவேளை கூட்டணி அரசியலை கையிலெடுத்தால் ‘தமிழ்த்தேசிய கருத்தியலையும் அண்ணன் சீமானை முதல்வர் வேட்பாளராகவும் ஏற்போருடன் கூட்டணி என்ற எங்களது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது. கொள்கை முரண் கொண்டவர்கள் எங்கள் நட்பு சக்தியாக இருக்க முடியாதே” என்றனர்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Trek Tamilnadu: `3 மாதங்களில் ரூ.63.43 லட்சம் வருவாய்; அர்த்தமுள்ள சுற்றுலா' - முதல்வர் ஸ்டாலின்

கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசு சார்பில் 40 இடங்களில் மலையேற்றம் செல்வதற்கான இணையவழி முன்பதிவு இணையதளத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.எளிமையான, மிதமான, கடினமான மலையேற்றம் என... மேலும் பார்க்க

Caste Census: `பாஜக-வை விமர்சிக்க மறுக்கிறாரா சீமான்?’ - குற்றச்சாட்டும் நாதகவின் விளக்கமும்!

பெரியார் விமர்சனத்திலேயே தேங்கி நின்ற நாம் தமிழர் கட்சி, சமீப நாட்களாக சாதிவாரிக் கணக்கெடுப்பு, பஞ்சமி நில மீட்பு உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதானப் படுத்தியுள்ளது. அடுத்தாக மீனவர்கள் கைதை கண்டித்து ஆர்ப்ப... மேலும் பார்க்க

Lex Fridman: எலான் மஸ்க் டு மோடி வரை... முக்கிய ஆளுமைகளை நேர்காணல் செய்த லெக்ஸ் ஃப்ரிட்மேன் யார்?

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, செயற்கை நுண்ணறிவு ஆய்வாளரும் பாட்காஸ்டருமான அமெரிக்காவின் லெக்ஸ் ஃப்ரிட்மேன் கிட்டத்தட்ட 3 மணிநேரம் நேர்காணல் செய்திருக்கிறார்.உலக அமைதி, இந்தியா புத்தர் மற்றும் காந்தி... மேலும் பார்க்க

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காத விவகாரம்; எதிர்க்கட்சியின் காரசார கேள்விக்கு முதல்வர் சொன்ன பதில்

கடந்த 14ம் தேதி (வெள்ளிக்கிழமை) 2025 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் பட்ஜெட் மற்றும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதற்கடுத்து சனிக்கிழமை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதைத்தொடர்ந்து இன்று (மார... மேலும் பார்க்க

விழுப்புரம்: ஆசிரியை அடித்ததால் மயங்கி விழுந்த மாணவர்; 2 ஆசிரியைகள் மீது நடவடிக்கை.. நடந்தது என்ன?

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே அரசு பள்ளியில் ஆசிரியர் தாக்கியதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவன் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பள்ளியை முற்றுகையிட்டு ... மேலும் பார்க்க

``சரியாகப் படிக்கவில்லை..'' - வாளி தண்ணீரில் தலையை முக்கி 2 மகன்களைக் கொன்று தந்தை தற்கொலை..?

ஆந்திராவில் காக்கிநாடா பகுதியைச் சேர்ந்த 37 வயதான நபர் வனப்பள்ளி சந்திர கிஷோர். இவர் பொதுத்துறைப் பிரிவில் கணக்காளராகப் பணிபுரிகிறார். மார்ச் 14 அன்று குடும்பத்தினருடன் ஹோலி பண்டிகையைக் கொண்டாடிய பிறக... மேலும் பார்க்க