செய்திகள் :

தேனி: சிப்பிபாறை டு ராட்வில்லர்; கண்காட்சியில் வரிசைகட்டிய பல வகை நாய்கள் - முதலிடம் பிடித்த கோம்பை!

post image

தேனி அருகே தப்புகுண்டுவில் உள்ள தேனி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நாய் பாதுகாப்பு கருத்தரங்கு மற்றும் நாய் கண்காட்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலாவதாக காவல்துறையின் வெடிகுண்டு தடுப்பு பிரிவை சேர்ந்த மோப்ப நாய்களான வெற்றி, வீரா, பைரவ், லக்கி ஆகிய நாய்கள் செயல்பாடுகள் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது.

முதல் பரிசை வென்ற நாய்க்கு பதக்கம் அணிவித்த தேனி கலெக்டர்

அதனைத் தொடர்ந்து, நாய் கண்காட்சி நிகழ்ச்சியில் நாட்டு நாய் வகையான கோம்பை , ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை மற்றும் வெளிநாட்டு இன நாய் வகைகளான லேப்ரடார், ஜெர்மன் ஷெஃபர்ட், பாக்ஸர், ராட்வில்லர், அமேரிக்கன் பிட்புல், பக் என 15 க்கும் மேற்பட்ட நாய் இனங்கள் கண்காட்சியில் பங்கேற்றன‌.

மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின் கண்காட்சியில் பங்கேற்ற நாய்கள், அதன் உரிமையாளர்களின் உத்தரவுக்கு பணிந்து செயல்பட்டது காண்போரை ஆச்சர்யப்படுத்தியது. நாய்களின் உடல் கட்டமைப்பு அதன் வளர்ச்சி உரிமையாளரின் உத்தரவுக்கு கீழ் பணிதல் உள்ளிட்டவை நடுவார்களால் கணக்கிடப்பட்டு மதிப்பெண் வழங்கப்பட்டது.

கண்காட்சியில் மோப்ப நாய்கள்

இதில் சிறந்த நாய்கள் என்ற முதல் இரண்டு இடங்களை கோம்பை இன நாய்கள் பிடித்தன. அதனைத் தொடர்ந்து அவற்றின் உரிமையாளரான மதுரையைச் சேர்ந்த ஷியாம் மற்றும் பொள்ளாச்சியைச் சேர்ந்த ராமநாதன் ஆகியோருக்கு தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் தேனி, மதுரை, விருதுநகர், கோவை, சிதம்பரம், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்... கேரளாவிலிரந்தும் சுமார் 50க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டன.

வண்டிப்பெரியாறு: அச்சுறுத்திய புலி மீது துப்பாக்கிச்சூடு; வனத்துறை மீதான குற்றச்சாட்டும் விளக்கமும்!

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் என்பது அடர்ந்த வனப்பகுதிகளை கொண்டது. அதில் கரடி, புலி, காட்டெருமை, காட்டு யானை போன்ற ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகள் ... மேலும் பார்க்க

சிறுத்தை, புலியுடன் நேரில் சண்டையிட்டு தப்பிப் பிழைத்த இருவர்... மருத்துவமனையில் சிகிச்சை

வனப்பகுதிக்கு அருகில் வசித்தால் சிறுத்தை, புலி போன்ற வன விலங்குகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம். அத்துடன், குடியிருப்பு பகுதிக்குள் வந்து நாய், ஆடு, மாடுகளை இழுத்துச் செல்வதும் வழக்கம். மகாராஷ்ட... மேலும் பார்க்க

``காட்டுமாட்டை மீட்க இரக்கமின்றி பேரம் பேசினார்கள்..." - வனத்துறையை சாடும் மக்கள்; என்ன நடந்தது?

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி வனக்கோட்டத்தில் காடுகளை இழந்து தவிக்கும் காட்டு மாடுகள், உணவு மற்றும் தண்ணீர் தேடி விளை நிலங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் பரிதவித்து வருகின்றன. அதிலும் குற... மேலும் பார்க்க

இனப்பெருக்கத்திற்குப் பிறகு பெண் ஆக்டோபஸ்கள் இறந்துவிடுமா? - octopus குறித்த ஆச்சர்ய தகவல்கள்!

ஜுராசிக் காலத்தின் பிற்பகுதியில் இருந்து ஆக்டோபஸ்கள் பூமியில் வாழ்ந்து வருகின்றன. கடலின் ஆழத்தில் உள்ள பவளப்பாறைகளில் வாழ்ந்து வருகின்றன. ஆழ்கடலில் இருக்கும் ஆக்டோபஸ்கள் குறித்த ஆச்சர்ய தகவல்களை தெரிந... மேலும் பார்க்க

குடியாத்தம்: தேனீக்கள் கொட்டி ஒருவர் மரணம்; 12 பேருக்கு தீவிர சிகிச்சை... என்ன நடந்தது?

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்துள்ள சின்ன பரவக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பால மூர்த்தி மகன் செந்தில்குமார் (40). இவர், பெங்களூரில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ் சிட்டி ஏரியாவில் வெல்டிங் கடை நடத்தி வந்தார்... மேலும் பார்க்க