நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிஎஸ்என்எல் கோபுரங்களை அதிகரிக்க வேண்டும்: சி...
குடியாத்தம்: தேனீக்கள் கொட்டி ஒருவர் மரணம்; 12 பேருக்கு தீவிர சிகிச்சை... என்ன நடந்தது?
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்துள்ள சின்ன பரவக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பால மூர்த்தி மகன் செந்தில்குமார் (40). இவர், பெங்களூரில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ் சிட்டி ஏரியாவில் வெல்டிங் கடை நடத்தி வந்தார்.
இந்த நிலையில், குலதெய்வ கோயிலில் வழிபாடு நடத்துவதற்காக செந்தில்குமார் தனது குடும்பத்தினருடன் குடியாத்தம் அருகேயுள்ள சொந்த ஊருக்கு வந்திருந்தார். சின்ன பரவக்கல் துணை மின் நிலையம் பின்புறமுள்ள தனது குலதெய்வமான கன்னியம்மன் கோயிலில் இன்று காலை படையல் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தார். அப்போது, சாம்பிராணி புகை அதிகமாக போட்டதால், அதிலிருந்து கிளம்பிய புகை மூட்டம் அருகிலுள்ள மரத்திலிருந்த தேன் கூட்டை கலைத்தது. கூட்டிலிருந்து கிளம்பிய ராட்சத தேனீக்கள் கோயிலில் கூடியிருந்தவர்களை துரத்தித் துரத்திகொட்டியது.

குளவிகள் கொட்டியதில் பாதிக்கப்பட்ட செந்தில்குமார் உள்பட அவரின் உறவினர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோக்கள் மூலம் மீட்கப்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே செந்தில்குமார் உயிரிழந்துவிட்டார். செந்தில்குமாரின் மனைவி மஞ்சு, மகள் தீட்சிதா, மகன் பிஜு உள்பட மேலும் 12 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதையடுத்து, உயிரிழந்த செந்தில்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியைக் கிளப்பியுள்ள இந்தச் சம்பவம் குறித்து, குடியாத்தம் நகரக் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
