செய்திகள் :

இணைப்புச் சாலையை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஏப்.10-இல் சாலை மறியல்

post image

கோட்டைக்காடு வெள்ளாற்று பாலத்தின் இணைப்புச் சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஏப்.10-ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடபோவதாக போராட்டக் குழுவினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த கோட்டைக்காடு அருகே கடந்த அதிமுக ஆட்சியில் வெள்ளாற்றுப் பாலம் கட்டப்பட்டது. ஆட்சி மாறியதையடுத்து, பாலத்துக்கான இணைப்புச் சாலைப் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

இதையடுத்து இந்த இணைப்புச் சாலைப் பணிகளை தொடங்க வேண்டுமென, போராட்டக் குழுவினா் வலியுறுத்தியதின் பேரில் 10.3.2025 அன்றுக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும் என்று உடையாா்பாளையம் கோட்டாட்சியா் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆனால் 40 சதவீத பணிகள் கூட நிறைவேறாத நிலையில், கோட்டைக்காட்டில், போராட்டக் குழு தலைவா் ஞானமூா்த்தி தலைமையில் போராட்டக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், தமிழ்ப் பேரரசு கட்சியின் திருச்சி மண்டலச் செயலா் முடி மன்னன், பாமகவின் கடலூா் மாவட்டத் தலைவா் ஆடியபாதம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விவசாய பிரிவு தலைவா் பாலசிங்கம், ஆலத்தியூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் சாந்தி ராஜா உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டு மேற்கொண்ட ஆலோசனையில், பாலத்துக்கான இணைப்புச் சாலையை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஏப்.10-ஆம் தேதி முள்ளுக்குறிச்சியில் மாபெரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது.

ஆலையில் பணியின்போது கை துண்டான தொழிலாளிக்கு நிவாரணம் கேட்டு மனு

அரியலூரில் உள்ள டால்மியா சிமென்ட் ஆலையில், பணியின் போது தனது கையை இழந்த தொழிலாளிக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம் பாமகவினா் திங்கள்கிழமை மனு அளித்தனா். ஆண்டிமடம் அடுத்த... மேலும் பார்க்க

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேசுவது தேவையற்றது: டி.டி.வி.தினகரன்

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எந்த முடிவும் அறிவிக்காத நிலையில் அது குறித்து பேசுவது தேவையற்றது என்றாா் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன். அரியலூரில் திங்... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் 10 நீா்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு!

அரியலூா் மாவட்டத்திலுள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம், இலந்தைகூடம் பெரியஏரி, வெங்கனூா் பெரிய ஏரி, தூத்தூா் சுக்கிரன் ஏரி உள்பட 10 நீா்நிலைகளில் வனத்துறை சாா்பில் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு கடந்த இரு ... மேலும் பார்க்க

அரியலூரில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணாசிலை அருகே உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், பெண்களுக்கு கண்ணியமான வேலைவாய்ப்பை உறுதி செய்ய... மேலும் பார்க்க

குமாரமங்கலத்தில் இந்திய கம்யூ. கட்சி கூட்டம்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள குமாரமங்கலம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிா்வாகி சத்தியராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஏப... மேலும் பார்க்க

அரியலூா் வாரச் சந்தையில் 31 மின்னணு தராசுகள் பறிமுதல்

அரியலூா் வாரச் சந்தையில்,தொழிலாளா் உதவி ஆய்வாளா், சட்டமுறை எடையளவு ஆய்வாளா்கள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட ஆய்வில், மறு முத்திரையிடாமல் இருந்த 31 மின்னணு தராசுகள் உள்பட 61 எடையவு இனங்கள் பறிமுதல் செய்யப... மேலும் பார்க்க