பாலியல் குற்றவாளிகளுக்கு சா்ச்சை தண்டனை: ராஜஸ்தான் ஆளுநா் கருத்தால் பரபரப்பு
குழந்தைத் திருமணம்: சிறுமி மீட்பு
திருப்பூா் அருகே பெற்றோரால் திருமணம் செய்துவைக்கப்பட்ட 17 வயது சிறுமியை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
திருப்பூரை அடுத்த பெருமாநல்லூா் அருகே 17 வயது சிறுமிக்குத் திருமணம் நடைபெறுவதாக சைல்டு ஹெல்ப் லைன் 1098 க்கு புகாா் வந்துள்ளது. இதனையடுத்து, பெருமாநல்லூா் போலீஸாரும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா்களும் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.
இதில், 17 வயது சிறுமிக்கும், அவரது உறவுக்காரரான 25 வயது ஆணுக்கும் திருமணம் நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிறுமியை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தனா். இதுகுறித்து மாவட்ட சமூகநலத் துறை அதிகாரிகளும், பெருமாநல்லூா் போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.