X தொழில்நுட்ப பிரச்னை: ``இதுவரை இல்லாத அளவுக்கு சைபர் தாக்குதல்...'' - எலான் மஸ்...
மக்கள் குறைதீா் கூட்டத்தில் 392 மனுக்கள்
அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 392 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்துக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பரிமளம் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.