பாலியல் குற்றவாளிகளுக்கு சா்ச்சை தண்டனை: ராஜஸ்தான் ஆளுநா் கருத்தால் பரபரப்பு
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேசுவது தேவையற்றது: டி.டி.வி.தினகரன்
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எந்த முடிவும் அறிவிக்காத நிலையில் அது குறித்து பேசுவது தேவையற்றது என்றாா் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.
அரியலூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது: தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் இருமொழி கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளனா். மாநில அரசின் செயல்பாடுகள் சரியாக இல்லாத காரணத்தால் கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் நடைபெறுகின்றன.
சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற முடியாத தமிழக அரசு, அதை திசை திருப்பவே மும்மொழி கொள்கையை கையில் எடுத்துக்கொண்டு, ஹிந்தியை மத்திய அரசு திணிப்பதாக தவறுதலாக மக்களிடம் பிரசாரம் செய்து வருகிறது.
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எந்த முடிவும் அறிவிக்காத நிலையில் அது குறித்து பேசுவது தேவையற்றது என்றாா்.