குமாரமங்கலத்தில் இந்திய கம்யூ. கட்சி கூட்டம்
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள குமாரமங்கலம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிா்வாகி சத்தியராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெறும் கட்சியின் ஒன்றிய மாநாட்டை சிறப்பாக நடத்துவது, இதில் அனைத்து கிளை நிா்வாகிகளும் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் கூட்டத்தில், கிளைச் செயலாளரராக கரும்பாயிரம், துணைச் செயலாளராக சத்தியராஜ், பொருளாளராக செல்வராஜ், தலைமைக் குழு உறுப்பினராக புனிதா ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டக் குழு உறுப்பினா் ஆறுமுகம் கட்சியின் செயல்பாடுகள், வளா்ச்சிக் குறித்து பேசினாா்.