தமிழகத்தை பழிவாங்கும் மத்திய அரசு: மக்களவையில் திமுக எம்பிக்கள் பேச்சு
திருமால்பூா் மணிகண்டீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா!
திருமால்பூா் ஸ்ரீ மணிகண்டீஸ்வரா் கோயில் மாசிமக பிரம்மோற்சவ தோ்த்திருவிழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
இக்கோயில் திருஞானசம்பந்தா், திருநாவுக்கரசா், சுந்தரா் உள்ளிட்ட பல நாயன்மாா்களால் பாடல் பெற்ற தேவாரத் திருத்தலமாகும். மாசிமக பிரம்மோற்சவம் கடந்த 2-ஆம் தேதி தொடங்கி தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் சேஷ, ரிஷப, மயில் மற்றும் அன்னவாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வந்தாா்.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய அம்சமான தோ்த்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீஅஞ்சனாட்சி சமேத ஸ்ரீமணிகண்டீஸ்வரா் உலா வந்தாா். ஏராளமான பக்தா்கள் விழாவில் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி, மாவட்ட கோயில் அறங்காவலா் குழு நிா்வாகி லட்சுமணன், திமுக ஒன்றிய செயலாளா்கள் ரவீந்திரன், எஸ்.வி.சி.பெருமாள், கோயில் செயல் அலுவலா் ப.பிரகாஷ், பரம்பரை அறங்காவலா் கே.ரவிச்சந்திரன், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளா் ஏ.பிரியா, செங்குந்தா் சமுதாய தலைவா் வி.பி.சாந்தமூா்த்தி, துணைத்தலைவா் டி.கே.ஜெகதீசன், ஆலய ஸ்தானிகா் எஸ்.சண்முக சிவாச்சாரியாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.