`ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் ராம் ரெண்டு பேர்கிட்டேயும் ஒரு ஒற்றுமை இருக்கு’ - நெகி...
பூங்கோடு கிராமத்தில் 108 கோ பூஜை
ஆற்காடு அடுத்த பூங்கோடு கிராமத்தில் 108 கோ பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கிராமத்தில் நித்தியகல்யாண வெங்கடேச பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராகவேந்திரா் 430- ஆம் ஆண்டு அவதார திருநாள் விழா முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாரதனை, பவானி ஸ்ரீ சுதா்சன மடம் ஸ்ரீமத் ராமாநுஜ ஜீயா் சுவாமி தலைமையில் ராணிப்பேட்டை ஆன்மிக சொற்பொழிவாளா் கோவிந்தராஜன் மகாலட்சுமி யாக பூஜை செய்தாா். விழாவில் சுற்றுரப் பகுதியைச் சோ்ந்த கிராமங்களில் இருந்து வந்திருந்த 108 பசுக்களுக்கு பூமாலை புடவை சாற்றி அகத்திக்கீரை வழங்கி பூஜை செய்து தீபாராதனை நடைபெற்றது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாக்குழுவினா் கன்னியப்பன், உபயதாரா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.