ரஷியாவிலிருந்து பிரிட்டன் தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்! -என்ன காரணம்?
'தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்’ - முதல்வர் ஸ்டாலின் காட்டம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. இதில், மக்களவையில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாட்டுக்கான மத்திய அரசின் கல்வி நிதி மறுக்கப்படுவது குறித்துகேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான், ``திமுக நேர்மையற்றது. தமிழக மாணவர்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை. மாணவர்களின் எதிர்காலத்தை அவர்கள் பாழாக்குகின்றனர். மொழிப் பிரச்னை செய்வது மட்டுமே அவர்களின் வேலை. அதில்தான் அரசியல் செய்கிறார்கள். அவர்கள் (திமுக) ஜனநாயகமற்றவர்கள், நாகரீகமற்றவர்கள்." என்று காட்டமாக விமர்சித்தார்.

இதனைத்தொடர்ந்து திமுக எம்.பிக்கள் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதானின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தர்மேந்திரா பிரதான், தனது பேச்சு புண்படுத்தி இருந்தால், வருத்தம் தெரிவிப்பதாகவும் திரும்ப பெறுவதாகவும் தெரிவித்திருந்தார். தற்போது தர்மேந்திரா பிரதானுக்கு எதிராக தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
`நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள்...’
அந்தப் பதிவில், " தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா? தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இதனை ஏற்கிறாரா? NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே? பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்!
தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசம் ஒன்றியக் கல்வி அமைச்சர் @dpradhanbjp அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும்!
— M.K.Stalin (@mkstalin) March 10, 2025
தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா?
தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள்.… pic.twitter.com/3uR2oMxLZw
உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!! நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்!” என பதிவிட்டுள்ளார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
