தலைமை நிர்வாக அதிகாரி பதவி நீட்டிப்புக்குப் பிறகு இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள்...
`மக்கள் உரிய நேரத்தில் பதிலடி கொடுப்பார்கள்' - தர்மேந்திர பிரதானைச் சாடிய செல்வப்பெருந்தகை
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. இதில், மக்களவையில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாட்டுக்கான மத்திய அரசின் கல்வி நிதி மறுக்கப்படுவது குறித்து கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ``திமுக நேர்மையற்றது. தமிழக மாணவர்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை. மாணவர்களின் எதிர்காலத்தை அவர்கள் பாழாக்குகின்றனர். மொழிப் பிரச்னை செய்வது மட்டுமே அவர்களின் வேலை. அதில்தான் அரசியல் செய்கிறார்கள். அவர்கள் (திமுக) ஜனநாயகமற்றவர்கள், நாகரிகமற்றவர்கள்." என்று காட்டமாக விமர்சித்தார்.

இதனைத் தொடர்ந்து திமுக எம்.பி-க்கள் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தர்மேந்திர பிரதான், தனது பேச்சு புண்படுத்தி இருந்தால், வருத்தம் தெரிவிப்பதாகவும் திரும்ப பெறுவதாகவும் தெரிவித்திருந்தார். இருப்பினும் தர்மேந்திர பிரதானின் பேச்சு விவாவாதப் பொருளாக மாறி இருக்கிறது.
அரசியல் கட்சி தலைவர்கள் தர்மேந்திர பிரதானிற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், " இன்று நாடாளுமன்றத்தில், தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடளுமன்ற உறுப்பினர்களை அநாகரிகமாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது. வாக்களித்து தேர்ந்தெடுத்த ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களை குறித்து தான் இவ்வகையில் பேசியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில், தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடளுமன்ற உறுபினர்களை அநாகரீகமாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது. வாக்களிக்து தேர்ந்தெடுத்த ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களை குறித்து தான் இவ்வகையில்…
— Selvaperunthagai K (@SPK_TNCC) March 10, 2025
நாடாளுமன்ற மாண்பை பற்றி சிறிதும் தெரியாதவர்கள் பாஜகவினர், சிறுபான்மையின நாடாளுமன்ற உறுப்பினரை அவர் சார்ந்த மதம் குறித்து பாஜக உறுப்பினர் அவதூறாக பேசும்போது, பாஜகவின் மூத்த அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் அதை ரசித்து, சிரித்து கொண்டிருந்தார்கள், இவர்கள்தான் ஜனநாயகம் குறித்து தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து பேசுகின்றனர். பாஜகவினர் கொண்டுவரும் அனைத்து மக்கள் விரோத திட்டங்களை, தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்பதால் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் வாய்க்கு வந்தததை பேசுகின்றனர். இவற்றையெல்லாம் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள், உரிய நேரத்தில் தகுந்த பதிலடியை கொடுப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs