ஐபிஎல் 2025: புகையிலை, மது விளம்பரங்களுக்கும் விற்பனைக்கும் தடை!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் புகையிலை, மது விளம்பரங்களை ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் விளையட்டுத் திடல்களிலும் அதேபோல, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடக நேரலையிலும் புகையிலை, மது விளம்பரங்களை ஒளிபரப்பக்கூடாது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஐபிஎல் நிர்வாகத்தை உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் ஆரம்பமாகவுள்ளன. இந்த நிலையில், சுகாதாரத் துறை இயக்குநரகத்திலிருந்து ஐபிஎல் தலைவர் அருண் சிங் தூமலுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ஐபிஎல் போட்டி நடைபெறும் இடங்களில் மேற்கண்ட பொருள்களின் விற்பனைக்கும் தடை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.