நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிஎஸ்என்எல் கோபுரங்களை அதிகரிக்க வேண்டும்: சி...
வேளாங்கண்ணி: திருமணம் மீறிய உறவு; கணவரைக் கொன்றுவிட்டு நாடகம்- ஆண் நண்பருடன் மனைவி சிக்கியது எப்படி?
கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் ஜனார்த்தனா (22). இவரது காதலி எலன் மேரி (21). இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர். தனியார் விடுதியில் அரை எடுத்து தங்கியவர்கள் வேளாங்கண்ணி மாதா கோவிலில் திருமணம் செய்து கொண்டு அறையில் தொடர்ந்து இருந்துள்ளனர். இந்த நிலையில் வேளாங்கண்ணி ரயில் நிலையம் அருகே கொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞர் உடல் கிடந்துள்ளது. வேளாங்கண்ணி போலீஸார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே, எலன் மேரி தனது கணவரை காணவில்லை என தேடி வந்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற எலன் மேரி, கொலை செய்யப்பட்ட கிடப்பது தன் கணவர் ஜனார்த்தனா என்று கூறி கதறி அழுதிருக்கிறார்.

இதையடுத்து எலன் மேரியிடம் பொறுப்பு காவல் ஆய்வாளர் சுப்ரியா விசாரணை நடத்தியுள்ளார். அப்போது என் கணவரின் நண்பர்களான ஜீவன்(19), மற்றும் 15 வயது சிறுவன் ஒருவனும் எங்களுடன் ஒரே அறையில் தங்கியிருந்தனர் என்றுள்ளார். முன்னுக்கு பின் முரணாக எலன் மேரி பேசியதில் அவர் மீது போலீஸார் சந்தேகமடைந்தனர். மேலும் பெங்களூர் தப்ப முயன்ற ஜனார்த்தனாவின் நண்பர்களான இருவரையும் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் உதவியுடன் போலீஸார் கைது செய்தனர்.
எலன் மேரி, ஜீவன், 15 வயது சிறுவன் ஆகியோரிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ``ஜனார்த்தனா, எலன் மேரி இருவரும் கல்லூரி படிக்கும் போதிலிருந்தே காதலித்துள்ளனர். வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டாரும் திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில் வேளாங்கண்ணி வந்தவர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதன் பின்னர் ஜீவன், 15 வயது சிறுவனும் வேளாங்கண்ணி வந்துள்ளனர்.
நான்கு பேரும் ஒரே அறையில் தங்கியிருந்துள்ளனர். இந்தநிலையில் தான் ஜனார்த்தனா கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு பக்கம் ஜனார்த்தனாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட எலன் மேரி, மறு பக்கம் அவரது நண்பரான ஜீவனையும் காதலித்துள்ளார். ஜீவனுடன் திருமணம் மீறிய உறவில் இருந்துள்ளார். இதற்கு இடையூறாக இருந்த ஜனார்த்தனாவை ஜீவனுடன் சேர்த்து தீர்த்து கட்ட நினைத்திருக்கிறார் எலன் மேரி. தன் திட்டபடி ஜீவனும், அந்த சிறுவனும் ஜனார்த்தனாவை வெளியே அழைத்துச் சென்று கச்சிதமாக தீர்த்து கட்டி விடுகின்றனர்.
இதற்கிடையே ஜனார்த்தனாவை காணவில்லை என நாடகமாடிய எலன் மேரி அவர் உடலை பார்த்து கதறுவது போல் நடித்தது சினிமாவை விஞ்சும் விதமாக இருந்தது. கொலையில் தொடர்புடைய மூன்று பேரையும் கைது செய்திருக்கிறோம். எலன் மேரியிடம் விசாரணையை தொடர்ந்து வருகிறோம்" என்றனர்.