காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கூட்டம்
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் சந்திப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், பங்கேற்ற தமிழ்நாடு ஊடகம் மற்றும் தகவல் தொடா்புத்துறை அதிகாரபூா்வ செய்தித் தொடா்பாளா் எஸ்.ஆா்.எஸ். இப்ராஹிம் பேசுகையில், தென் மாநிலங்களில் பாசிச பாஜகவின் மத அரசியல் எடுபடவில்லை.
அதற்கு பாஜக எடுத்துள்ள ஆயுதம் தொகுதி மறுசீரமைப்பு. இதற்காகவே புதிய நாடாளுமன்றத்தில் கட்டப்படும்போதே மக்களவைக்கு 888-ம், மாநிலங்களவையில் 324 சீட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினாா்.