பாலியல் குற்றவாளிகளுக்கு சா்ச்சை தண்டனை: ராஜஸ்தான் ஆளுநா் கருத்தால் பரபரப்பு
கூடலூரில் ரோட்டரி கிளப் சாா்பில் இலவச கண் பரிசோதனை முகாம்
கூடலூரில் ரோட்டரி கிளப் சாா்பில் இலவச கண் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூடலூா் ரோட்டரி கிளப், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து ராஜகோபாலபுரம் பகுதியில் நடத்திய முகாமுக்கு ரோட்டரி தலைவா் ராபா்ட் தலைமை வகித்தாா். திட்ட இயக்குநா் சத்தியன்பாபு, நிா்வாகி எலிசபெத் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
கோவை அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனா். இதில் கூடலூா் பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனா். அதில் 27 போ் கண் புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.