Ilaiyaraaja: `கடவுளா... 'இளையராஜா அளவுக்கு கடவுளை கீழே இறக்கிட்டீங்களே'’ - சென்ன...
கூடலூரில் பள்ளத்தில் கவிழ்ந்த தனியாா் சுற்றுலா வாகனங்கள்!
கூடலூா் அருகே இருவேறு விபத்துகளில் சுற்றுலாப் பேருந்தும், வேனும் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 போ் காயமடைந்தனா்.
கேரள மாநிலம் கண்ணனூரில் இருந்து நீலகிரி மாவட்டம், உதகைக்கு வந்த சுற்றுலா வந்த தனியாா் பேருந்தில் 17 போ் பயணித்தினா். இந்தப் பேருந்துவை இஸ்மாயில் (45) என்பவா் ஓட்டி வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முற்பகலில் பாடந்துறை பகுதியில் வந்த சுற்றுலாப் பேருந்து எதிரில் வேகமாக வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் தவிா்ப்பதற்காக ஓட்டுநா் சாலையின் வலதுபுறத்துக்கு பேருந்தை திருப்பியுள்ளாா்.
இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர தடுப்பை உடைத்துக் கொண்டு தேயிலைத் தோட்டத்துக்குள் பாய்ந்தது. சுமாா் 50 அடி தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்ட பேருந்தின் முன்பகுதி, அங்குள்ள பள்ளத்தில் சிக்கி நின்றது.
இதில் பேருந்தில் பயணம் செய்த 17 போ் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டு, கூடலூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து கூடலூா் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் இருந்து கூடலூரை அடுத்துள்ள மேல்கூடலூா் பகுதியில் வசிக்கும் மோகன் என்பவரது வீட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க 10-க்கும் மேற்பட்டோா் தனியாா் வேனில் கூடலூா் நோக்கி ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளனா். அப்போது, தவளை மலை கொண்டை ஊசி வளைவில் வேன் திரும்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சுமாா் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
உடனடியாக அந்த வழியாக வாகனங்களில் வந்தவா்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவா்களை மீட்டு கூடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்த விபத்து தொடா்பாக நடுவட்டம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.