ஆந்திர எம்எல்சி தேர்தல்: பாஜக வேட்பாளராக சோமு வீரராஜு அறிவிப்பு!
Career: வேலை கிடைச்சுருச்சுனு சும்மா உக்காந்திராதீங்க; கரியரில் 'இது' ரொம்பவே முக்கியம் பிகிலு
பலவித டெக்னாலஜி சூழ்ந்து கிடக்கிற இந்த உலகத்தில் போட்டிகளும் பல. 'வேலை தான் கிடைச்சாச்சே...', 'அடுத்த வேலை வாங்க இந்த எக்ஸ்பீரியன்ஸ் போதும்' என்று நீங்கள் அப்டேட் ஆவதை நிறுத்திவிடாதீர்கள்.
'கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு' என்பது உண்மை. அதனால், இந்த போட்டி உலகில் நாளுக்கு நாள் நாம் அப்டேட் ஆகிக்கொண்டிருப்பது அவசியம். இதற்காக ஸ்கூலுக்கோ, காலேஜுக்கோ செல்ல வேண்டும் என்று தேவையில்லை. கிடைக்கும் நேரத்தில், ஆன்லைனிலேயே பல கோர்ஸ் வெப்சைட்டுகள் கொட்டிக்கிடக்கின்றன. அதைப் பயன்படுத்தி நம் துறையில் புதிதாக என்ன வந்துள்ளது... அதில் எது நமக்குத் தேவை என்பதை பார்த்து, ஆராய்ந்து படிக்கலாம். படிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், அதில் தேர்வு எழுதி சான்றிதழும் பெற்றுவிடுங்கள்.

'படிச்சாச்சு... சான்றிதழ் வாங்கியாச்சு' என்று நின்றுவிடாமல், நீங்கள் படித்து சான்றிதழ் பெற்றதை உங்கள் ரெஸ்யூமில் கட்டாயம் அப்டேட் செய்துவிடுங்கள். 'புது வேலை தேடும்போது அப்டேட் பண்ணிக்கலாம்' என்று அசால்டாக இருந்தால், கடைசி நேரத்தில் நீங்கள் அப்டேட் செய்வதை மிஸ் செய்திடவும் வாய்ப்புகள் அதிகம்.
அதனால், நீங்கள் அப்டேட் ஆவதும், உங்கள் ரெஸ்யூமை அப்டேட் செய்வதும் முக்கியம் பிகிலு...!
சரி உங்களுக்கு ஒரு கேள்வி. உங்கள் துறை சார்ந்து நீங்கள் எந்த வெப்சைட்டில் என்ன கோர்ஸ் படிக்கிறீர்கள் என்பதைக் கமென்ட்டில் பதிவிடுங்கள்!