வாக்காளர் பட்டியல் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும்: ராகுல்
ஆந்திர எம்எல்சி தேர்தல்: பாஜக வேட்பாளராக சோமு வீரராஜு அறிவிப்பு!
ஆந்திர மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டமேலவை உறுப்பினா் (எம்எல்சி) தேர்தலுக்கான வேட்பாளராக சோமு வீரராஜுவை பாஜக அறிவித்துள்ளது.
எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து ஆந்திர சட்டமேலவை உறுப்பினர்களுக்கான (எம்எல்சிக்கள்) தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. அந்தவகையில், இந்தாண்டுக்கான தேர்தல் சமீபத்தில் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டன.
மார்ச் 20ஆம் தேதியன்று தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, பாஜகவின் மத்தியந தேர்தல் குழு சோமு வீரராஜுவை தேர்ந்தெடுத்துள்ளதாக பாஜக தேசிய பொதுச் செயலாளரும் தலைமையகப் பொறுப்பாளருமான அருண் சிங் தெரிவித்தார்.
இதன் மூலம், தெலுங்கு தேசம் பாஜக மற்றும் ஜனசேனாவின் என்டிஏ கூட்டணியின் ஐந்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அவையில் போதுமான எண்ணிக்கையிலான சட்டமேலவை உறுப்பினர்கள் இல்லாததால் ஓய்எஸ்ஆர்சிபி போட்டியிடப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளது.