மகாராஷ்டிரம் 2047-க்குள் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்கும்: அஜித் பவார்
ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மும்பையில் தரையிறக்கம்
நியூயார்க்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் மும்பையில் தரையிறக்கப்பட்டது.
320க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் திங்கள்கிழமை காலை நியூயார்க்கிற்கு புறப்பட்டது. நடுவானில் விமானத்தின் பாதுகாப்பில் அச்சுறுத்தல் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்த விமானம் மீண்டும் மும்பையில் தரையிறக்கப்பட்டது. உடனே பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விமானம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
விமானத்தின் கழிப்பறைகளில் ஒன்றில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
நியூயார்க் சென்ற போயிங் 777-300 ER விமானத்தில் 19 பணியாளர்கள் உள்பட 322 பேர் இருந்ததாக வட்டாரங்களில் ஒன்று தெரிவித்துள்ளது.
ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக இரட்டைக் குழந்தைகளை கொலை செய்த தாய் கைது
இந்தியாவில் சமீபகாலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது ஒரு தொடர் நிகழ்வாக உள்ளது. வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, பல விமானங்களில் அவசர சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.