தலைமை நிர்வாக அதிகாரி பதவி நீட்டிப்புக்குப் பிறகு இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள்...
ஸோஹோவின் இ-ஸ்கூட்டர்.. அறிமுக விலை இவ்வளவுதானா? தள்ளுபடியுமா?
ஸோஹோவின் அல்ட்ராவயலட் நிறுவனத்தின் முதல் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் குவிந்து வருகிறது. அதனால், தள்ளுபடியையும் நிறுவனம் அதிரடியாக அறிவித்து வருகிறது.
தகவல்தொழில்நுட்பத் துறையில் கோலோச்சி வரும் ஸோஹோ நிறுவனம், வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியதுதான் அல்ட்ராவயலட் நிறுவனம்.
இது தற்போது மின்னணு ஸ்கூட்டர்களை தயாரிப்பதில் ஆர்வம்காட்டி வருகிறது. அதன்படி, கடந்த புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட டெஸ்ஸராக்ட் அறிமுக விலை ரூ.1.20 லட்சம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த விலை முதல் 10 ஆயிரம் முன்பதிவாளர்களுக்கு மட்டுமே என்றும், அதன் பிறகு முன்பதிவு செய்பவர்களுக்கான விலை ரூ.1.45 லட்சம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து, ஷாக்வேவ் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இ-பைக் அறிமுக விலை ரூ.1.43 லட்சம். இது முதல் 1000 பயனர்களுக்கு மட்டுமே. முன்பதிவு புதன்கிழமை முதல் தொடங்கியிருந்தாலும் வாகனங்கள் முன்பதிவு செய்த பயனாளர்களுக்கு 2026ஆம் ஆண்டு முதல் காலாண்டில்தான் ஒப்படைக்கப்படவிருக்கிறதாம்.
டாடா மோட்டார்ஸ் - ஸோஹோ கார்ப்பரேஷன் முதலீட்டாளர்களாக இருக்கும் அல்ட்ராவயலட் நிறுவனம், அடுத்த 3 ஆண்டுகளில் 10 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த இ-பைக்குகள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 261 கிலோ மீட்டர் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.