உயர்ந்து முடிந்த சன் பார்மா பங்குகள்!
புதுதில்லி: அமெரிக்காவைச் சேர்ந்த, 'செக்பாயிண்ட் தெரபியூடிக்ஸ்' நிறுவனத்தை, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 355 கோடி டாலருக்கு வாங்க உள்ளதாக அறிவித்தையடுத்து அதன் பங்கின் விலை 0.13% உயர்ந்து முடிந்தது.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில் பங்கின் விலை 2.06 சதவிகிதம் உயர்ந்து ரூ.1,643.20 ஆக வர்த்தகமான நிலையில், வர்த்தக முடிவில் சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 0.13 சதவிகிதம் உயர்ந்து ரூ.1,612 ஆக முடிவடைந்தது. தேசிய பங்குச் சந்தையில், இது 0.04 சதவிகிதம் உயர்ந்து ரூ.1,610 ஆக முடிவடைந்தது.
பங்குகளின் வர்த்தக அடிப்படையில், நிஃப்டி-யில் 16.01 லட்சம் ஈக்விட்டி பங்குகளும், மும்பை பங்குச் சந்தையில் 32,000 பங்குகள் கைமாறியது குறிப்பிடத்தக்கது.
தனது ஒழுங்குமுறை தாக்கல் செய்ததில் குறிப்பில், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், செக்பாயிண்ட் தெரபியூடிக்ஸ் - ஐ 355 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து கையகப்படுத்துவதாகக் தெரிவித்தது.
இதையும் படிக்க: இந்திய ரூபாயின் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ.87.33-ஆக முடிவு!