சிங்கப்பூரை வளமாக்கும் புதிய குடிமக்கள்: மூத்த அமைச்சா் லீ சியென் லூங் பெருமிதம்...
இந்தியாவில் 200 கோடி டாலர் மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்ய ஹையர் நிர்ணயம்!
நொய்டா: ஹையர் அப்ளையன்சஸ் இந்தியா அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் 200 கோடி அமெரிக்க டாலர் விற்பனை நிறுவனமாக மாறும் என்று தெரிவித்துள்ளது.
வீட்டு உபகரணங்கள் தயாரிப்பாளரான ஹையர், புதிய ஏசி உற்பத்தி மற்றும் மோல்டிங் அலகுகளை அமைக்க 2024 முதல் 2028 க்கு இடையில் ரூ.1,000 கோடிக்கு மேல் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்தது.
ஏற்கனவே புனே மற்றும் நொய்டாவில் உள்ள அதன் ஆலைகளில் இதுவரை ரூ.2,400 கோடியை முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் ஹேயர் இந்தியா 15 லட்சம் ஏசி யூனிட்டுகளிலிருந்து ஆண்டுக்கு 40 லட்சம் ஏசி யூனிட்டுகளை உற்பத்தியை செய்யும்.
தற்போது நிறுவனத்திடம் 15 லட்சம் ஏசி யூனிட்களை உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. இருப்பினும், இந்தியாவில் ஏசி சந்தை வளர்ந்து வரும் விதம் 2027ல் உற்பத்தி பற்றாக்குறையாக இருக்கும் என்றார்.
வரவிருக்கும் புதிய தொழிற்சாலையால், இது 25 லட்சம் யூனிட்களாக இருக்கும் என்றார் ஹையர் அப்ளையன்சஸ் இந்தியா தலைவரான என்.எஸ்.சதீஷ்.
தென்னிந்தியாவில் ஒரு ஆலையை அமைக்க உள்ளதாகவும் அதன் முதலீட்டை விரைவில் அறிவிப்போம் என்றார். 2024ல் ஹையர் வருவாய் 36 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்து ரூ.8,900 கோடியாக உயர்ந்தது. அதே வேளையில், நடப்பாண்டு அதன் வருவாய் ரூ.11,500 கோடியைத் தாண்டும் என்றார்.
இந்தியாவில் ஒரு பெரிய வாய்ப்பை நாங்கள் காண்கிறோம். பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை நீங்கள் பார்க்கும்போது, இது மிகச் சிறப்பாக செயல்படுகிறது. ஹேயர் அப்ளையன்சஸ் இந்தியா எப்போது 2 பில்லியன் டாலர் நிறுவனமாக மாறும் என்ற கேள்விக்கு அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில், நிச்சயமாக 2 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்றார்.
இதையும் படிக்க: பிகார் அரசு பள்ளிகளில் புதிதாக 51,389 ஆசிரியர்கள் நியமனம்!