ஹூண்டாய் விற்பனை 3% சரிவு
முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் மோட்டாா் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதம் 3 ரிந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த பிப்ரவரி மாதத்தில் நிறுவன வாகனங்களின் மொத்த விற்பனை 58,727-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் அதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 60,501-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 3 சதவீதம் குறைந்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 5 சதவீதம் சரிந்து 50,201-ஆக உள்ளது. ஏற்றுமதி 10,300-லிருந்து 11,000-ஆகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.