Dhanush: ``தனுஷுடன் இணைந்து நடிப்பது அற்புதமான ஒன்று; இதுவும் லவ் ஸ்டடோரிதான்'' - கிர்த்தி சனூன்
தனுஷ் நடிப்பில் உருவாகும் `தேரே இஷ்க் மெயின் (Tere Ishq Mein)' படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடந்துகொண்டிருக்கிறது. `ராஞ்சனா', `Atrangi Re' திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பாலிவுட் திரைப்படம் `தேரே இஷ்க் மெயின்'. இப்படத்தில் தனுஷுடன் பாலிவுட் நடிகை கிர்த்தி சனூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஜெய்பூரில் நேற்றைய தினம் நடைபெற்ற 2025-ம் ஆண்டுக்கான IIFA டிஜிட்டல் விருது விழாவில் பங்கேற்ற நடிகை கிர்த்தி சனூன் இத்திரைப்படம் தொடர்பாகப் பேசியிருக்கிறார்.
கிர்த்தி சனூன் பேசுகையில், `` ஆனந்த் எல். ராய் மற்றும் தனுஷுடன் தற்போது `தேரே இஷ்க் மெயின்' படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறேன். டெல்லியில் நடக்கும் படப்பிடிப்பிற்கு நான் மீண்டும் வருவதற்காக அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அது ஓர் அழகான திரைப்படம். அத்திரைப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் இதற்கு முன் நான் நடித்திராத ஒன்று. எனக்கு லவ்தான் மிகவும் பிடித்த ஜானர்.

இத்திரைப்படமும் லவ் ஸ்டோரிதான். கதையை வித்தியாசமாகத் தயார் செய்திருக்கிறார்கள். தனுஷ் சாருடன் முதல் முறையாக இணைந்து நடிப்பது அற்புதமான ஒன்று. அதுபோல திரைப்படமும் அற்புதமாக இருக்கும். நான் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்." எனக் கூறியிருக்கிறார்.