``ரீல்ஸ் பண்றவங்களுக்கு சினிமாவுல வாய்ப்பு; எனக்கு இப்போதும் அங்கீகாரம் இல்ல"- ட...
தெப்பக்குளத்தில் மூழ்கிய தொழிலாளி உயிரிழப்பு
மேலூா் தெப்பக் குளத்தில் குளிக்கச் சென்ற கூலித் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், மேலூா் காய்கறி சந்தைப் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (48). கூலித் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை தெப்பக்குளத்தில் குளிப்பதற்கு இறங்கினாராம். அப்போது ஆழமான பகுதிக்குள் சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து, மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.