செய்திகள் :

ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் கழிவறை... பொதுமக்களும் பயன்படுத்தலாம்! - வைரல் வீடியோவும் சட்ட விளக்கமும்!

post image

‘நீங்க இப்ப சென்னை மவுன்ட் ரோட்டுல போய்க்கிட்டிருக்கீங்க. திடீர்னு உங்களுக்கு சிறுநீர் கழிக்கவேண்டிய அவசரமான சூழல். பக்கத்துல பொதுக் கழிப்பறை எதுவும் இல்லை. சுத்திப் பார்த்தா பக்கத்துல ஐடிசி கிராண்ட் சோழா ஸ்டார் ஹோட்டல் இருக்கு. இதுக்குள்ளயெல்லாம் அனுமதிப்பாங்களானு கொஞ்சம்கூட யோசிக்காதீங்க. நேரா உள்ள போங்க... கழிப்பறையைப் பயன்படுத்துங்க. பேசாம வந்துகிட்டே இருங்க. உங்களை யாரும் தடுக்கமுடியாது’னு சொன்னா... நம்புவீங் களா? சமீபத்தில் சுற்றலில் வந்த வீடியோ அப்படித்தான் சொன்னது.

`ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள் உள்ளிட்ட எல்லா வகையான ஹோட்டல் களும் தங்களது கழிவறை வசதியை, தங்கள் விடுதிகளில் தங்குபவர்கள் மட்டுமன்றி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கும் அனுமதிக்க வேண்டும். அனுமதிக்கவில்லை என்றால், சாரைஸ் சட்டம், 1867-ன்படி அந்த ஹோட்டலின் உரிமத்தையே ரத்து செய்யலாம். இந்தப் புகாரை தெரிவிப்பதற் கான ஹெல்ப்லைன் எண்களும் உள்ளன’ என்றபடி வலம்வந்து கொண்டிருக்கும் அந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கான வியூவ்ஸ் மற்றும் ஷேர்ஸ்.

பொதுவாகவே, சோஷியல் மீடியாக்களில் பற்பலவிதமான வீடியோக்கள் சுற்றலில் விடப்பட்டு, மக்களை சுத்தலில் விட்டுக் கொண்டுள்ளன. என்றாலும், இந்த வீடியோவின் உண்மைத் தன்மை பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நமக்குத் தோன்றியது. குறிப்பாக, மக்களின் மிகமிக முக்கியமான பிரச்னை பற்றி பேசும்போது, அதைத் தெளிவுபடுத்திக் கொள்ள நினைத்தோம்.

ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்

`சாரைஸ் சட்டம் என்பது உண்மையா... இந்த வீடியோவில் குறிப்பிட்டது போலவெல்லாம் அந்தச் சட்டத்தைப் பயன் படுத்த முடியுமா?’ என்ற கேள்விகளை சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்வப்னாவிடம் கேட்டோம்.

``சாரைஸ் சட்டம் (Sarais Act, 1867) என்பது பிரிட்டிஷ் காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டம். தற்போதும் நடைமுறையில் இருக்கிறது. சாரைஸ் என்றால், பயணி களுக்கான ஓய்வறை என்று பொருள். அது போன்ற விடுதிகளை நடத்துபவர்கள், தங்கள் விடுதியை சாரைஸ் சட்டத்தின் கீழ் பதிய வேண்டும். அப்படிப் பதிவு செய்பவர்கள், தங்கள் விடுதிகளில் சில பொது வசதிகளை பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என இந்தச் சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

1. எல்லா மக்களும் தண்ணீர் அருந்த அனுமதிக்க வேண்டும்.

2. பயணிகள், கழிவறைகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

3. சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும்.

4. நல்ல முறையில் செயல்பட வேண்டும். தவறினால் அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்படும்.

- இவைதான் இந்தச் சட்டத்தில் முதன்மையாக வலியுறுத்தப்பட்டுள்ளன’’ என்றவர், இந்த சாரைஸ் சட்டமானது சொகுசு விடுதிகள், தனியார் ரிசார்ட்கள், ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள் உள்ளிட்ட நவீன ஹோட்டல்களுக்குப் பொருந்தாது என்கிறார்.

‘`சாரைஸ் என்பது பயணிகள் தங்கும் பழைய காலக் கட்டடங்கள், தரகர் மாளிகைகள் மற்றும் அரசு ஏற்படுத்திய தங்கும் விடுதிகளையே குறிக்கும். ஆகவே, இந்தச் சட்டத்தை நவீன ஹோட்டல்களுக்குப் பொருத்த முடியாது. இந்த சாரைஸ் சட்டம் இன்றும் நடைமுறையில் இருந்தாலும், மிகவும் பழைய சட்டமாக இருப்பதால் அதன் பயன்பாடு பெரிதாக இல்லை.

விடுதிகளுக்கான வரையறைகள் குறித்து தங்களுக்கான லாட்ஜிங் ஹவுஸ் லா (Lodging House Law), ஹோட்டல் அண்ட் டூரிஸம் ரெகுலேஷன்ஸ் (Hotel & Tourism Regulations) உள்ளிட்ட விதிகளை மாநில அரசுகள் ஏற்படுத்திக் கொண்டுள்ளன.

சாரைஸ் சட்டத்தின் கீழ் நவீன ஹோட்டல்கள் வருவதில்லை என்பதால், அந்தச் சட்டம் அவற்றுக்குப் பொருந்தாது. இந்தச் சட்டத்தின் அடிப்படையில் நவீன ஹோட்டல்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவன சட்டம்கூட (Shops & Establishments Acts), அந்தந்த ஹோட்டல்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான கழிவறை வசதி பற்றித்தான் பேசுகிறதே தவிர, பொதுமக்கள் இதில் வரமாட்டார்கள்.

ஆக, சாரைஸ் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தங்கும் விடுதிகளில்தான் மட்டும்தான் பொதுமக்கள் குடிநீர் மற்றும் கழிவறையைப் பயன்படுத்திக் கொள்ளும் வசதியை சட்டப்படி கோரமுடியும். ஆனால், அப்படிப் பதிவான தங்கும் விடுதிகள் எவையெவை என்று கண்டறிவது சுலபமல்ல’’ என்று தெளிவுபடுத்தினார், வழக்கறிஞர் ஸ்வப்னா.

‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு!’

வேளாண் தனி நிதிநிலை அறிக்கை... வெத்து வேட்டாகவே இருக்கும்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!‘‘தி.மு.க அரசுதான் தமிழ்நாட்டில், முதன்முறையாக வேளாண் நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கையைத் தாக்கல் செய்தது’’ என்று கடந்த நான்கு ஆண்டுகளாகவே பெருமை பேசிவருகிறார், தமிழ்நாடு வேளாண்த... மேலும் பார்க்க

ரூ. 1,600 கோடி ஆலை; முத்தையா முரளிதரனுக்கு ஜம்மு காஷ்மீரில் இலவச இடம்?!; கிளம்பிய எதிர்ப்பு

ஜம்மு காஷ்மீரில், இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் சிலோன் பீவரேஜ் கேன் பிரைவேட் லிமிடெட் நிறுவன (Ceylon Beverage Can Pvt Ltd) ஆலை அமைக்க ஜம்மு காஷ்மீரில் இலவசமாக இடம் ஒதுக்கிய விவ... மேலும் பார்க்க

`இனி GPay, Phone Pe மூலம் PF பணம் எடுத்துக்கொள்ளலாம்' - மக்களே ஒரு குட் நியூஸ்!

இனி பயனாளர்கள் யுபிஐ மூலமே தங்களது பணத்தை எடுத்துக்கொள்ளும் புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளது வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO). இதனால் ஊழியர்கள் தங்களுடைய வருங்கால வைப்பு நிதியை (PF) நேரடியாக ஜிபே... மேலும் பார்க்க

Railways: இனி கன்ஃபார்ம் டிக்கெட் இல்லாமல் இந்த ரயில் நிலையங்களுக்குள் செல்ல முடியாது!

இந்தியாவில் உள்ள 60 முக்கிய ரயில் நிலையங்களில் உறுதிபடுத்தப்பட்ட பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே உள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என இந்தியன் ரயில்வேஸ் அறிவித்துள்ளது. ரயில் நிலையங்களில் ஏற்படும்... மேலும் பார்க்க

``என் தாய்க்கு பெரும்பங்கு உண்டு'' - சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வான நெல்லை பேராசிரியை உருக்கம்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள இரு மொழிகள் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் மலையாளம் கற்றுக் கொண்டேன். அதன் பின்னர் எனது தனிப்பட்ட ஆர்வத்தால் மொழிபெயர்ப்பு பணியை தொடங்கினே... மேலும் பார்க்க

வேலூர்: சுட்டிக்காட்டிய விகடன்; மீன் மார்க்கெட் வளாக மேடைக்கடைகள் சீரமைப்பு பணியிலிறங்கிய அதிகாரிகள்

வேலூர் மாநகராட்சியில் பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் கடந்த 2015-16 ஆம் நிதி ஆண்டில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.82.90 லட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி மேடைக்கடைகள் அமைக்கப்பட்டன. இந்தக் கடைகள் க... மேலும் பார்க்க