கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 55-க்கும் மேற்பட்ட நீா்வாழ் பறவைகள் பட்டியலிடப்பட்டுள்ள...
`இனி GPay, Phone Pe மூலம் PF பணம் எடுத்துக்கொள்ளலாம்' - மக்களே ஒரு குட் நியூஸ்!
இனி பயனாளர்கள் யுபிஐ மூலமே தங்களது பணத்தை எடுத்துக்கொள்ளும் புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளது வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO). இதனால் ஊழியர்கள் தங்களுடைய வருங்கால வைப்பு நிதியை (PF) நேரடியாக ஜிபே, போன் பே போன்ற யுபிஐ செயலிகள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
தற்பொழுது EPFO பயனாளர்கள் தங்களுடைய வருங்கால வைப்பு நிதியை எடுக்க குறைந்தபட்சம் 10 நாள்கள் முதல் சில வாரங்கள் வரை ஆகிறது. இதற்காக UMANG செயலி அல்லது www.epfindia.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்துகின்றது. 10 நாள் முதல் சில வாரங்கள் வரை ஆவதால் அவசர காலத்திற்கு வருங்கால வைப்பு நிதியை பயனாளர்கள் பெற்றுக் கொள்வதில் சிரமம் இருக்கிறது. அதை தீர்க்கவே யுபிஐ மூலம் பணம் விரைவாகப் பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

யுபிஐ மூலம் வருங்கால வைப்பு நிதியை பெற EPFO பயனாளர்கள் தங்களுடைய ஜிபே, போன்பே போன்ற செயலிகளில் உள்ளே சென்று ‘EPFO Withdrawal’ என்னும் அம்சத்தை பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. மேலும் EPFO பயனர்களுக்கு உண்டான UAN எண்ணை உள்ளீடு செய்து KYC விவரங்களை சரிபார்த்து வருங்கால வைப்பு நிதியை திரும்ப பெற்றுக் கொள்ளும் படி புதிய வசதியையும் கொண்டுள்ளது. EPFOவின் விதிமுறைகளுக்கு ஏற்ப தங்களது கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டால் உடனடியாக தங்கள் யுபிஐ உடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிற்கு வருங்கால வைப்பு நிதி வந்து சேர்ந்துவிடும்.
இந்த முயற்சியின் மூலம் 7 கோடிக்கும் மேற்பட்ட EPFO பயனாளர்கள் எளிமையாகவும், விரைவாகவும் வருங்கால வைப்பு நிதியை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய வசதி இந்த ஆண்டின் மே அல்லது ஜூன் மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.