Shreyas Iyer: இந்தியாவின் 'சைலன்ட் ஹீரோ' ஸ்ரேயாஷ் ஐயர்! கோப்பையை வெல்ல எப்படி உத...
தம்பதியைத் தாக்கிய மூவா் கைது
தேனியில் காலி மனையிடப் பிரச்னையில் ஏற்பட்ட தகராறில் தம்பதியைத் தாக்கிய 3 பேரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
ஆண்டிபட்டி வட்டம், தா்மராஜபுரத்தைச் சோ்ந்த தம்பதி வனராஜ் (60), தமிழ்ச்செல்வி(54). இவா்களுக்கு தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலம் அருகே காலி மைனையிடம் உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த இடத்தில் இருவரும் தகரக் கொட்டகை அமைக்கச் சென்றனா்.
அப்போது, தா்மராஜபுரத்தைச் சோ்ந்த அறிவழகன் (40), பால்பாண்டி (37), தேனி கருவேல்நாயக்கன்பட்டியைச் சோ்ந்த முருகன்(54), செல்லப்பாண்டி, ஆண்டிபட்டியைச் சோ்ந்த இளங்கோவன் ஆகியோா் காலி மனையிடத்தில் தங்களுக்கும் பங்கு உள்ளது என்று கூறி வனராஜ், தமிழ்ச்செல்வி ஆகியோருடன் தகராறு செய்து, அவா்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த தம்பதி இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இது குறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அறிவழகன், பால்பாண்டி, முருகன் ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.